விரிவாக்கப் பணிக்காக சாலை நடுவே தோண்டப்பட்ட பள்ளம்.. அதிகாலை நேரத்தில் மோட்டார் சைக்கிளுடன் பள்ளத்தில் விழுந்தவர் பலி

கும்பகோணம் அருகே மருதாநல்லூரில் சாலை விரிவுபடுத்தும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கும்பகோணம் -நீடாமங்கலம்- மன்னார்குடி சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிக்காக வாய்க்கால்கள் உள்ள பகுதியில் உள்ள சாலைகள் உடைக்கப்பட்டு காங்கிரீட் தளம் அமைக்கப்பட்டு வருகிறது.

இன்று அதிகாலை கும்பகோணம் கோ .சி .மணி நகரைச் சேர்ந்த மோகன் என்பவர் மோட்டார் சைக்கிளில் அவ்வழியே வந்தபோது சாலையில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தவறி விழுந்ததில் உயிரிழந்தார்.

பள்ளம் இருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாக எச்சரிக்கை நாடாக்கள் கட்டப்பட்டிருந்ததாகவும் அதிகாலை நேரம் என்பதால் பார்வைக் குறைபாடு காரணமாக பள்ளத்தில் விழுந்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ஆனால் நெடுஞ்சாலைத்துறையின் அலட்சியமே அவரது உயிரிழப்புக்குக் காரணம் எனக் கூறி, உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.