இந்து அறநிலையத்துறை சார்பில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1500 கோவில்களில் திருப்பணிகள் செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய அவர், பழனி முருகன் கோவில் நடத்தும் பள்ளி கல்லூரிகளில் பயிலும் மூவாயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவியருக்கு இலவசமாகக் காலைச் சிற்றுண்டி வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு 8 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தங்கத்தேர் உருவாக்கப்படும் என்றும், நாகப்பட்டினம் மாவட்டம் துளசியாபட்டினத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் அவ்வையார் மணிமண்டபம் அமைத்து அவரது பாடல்கள் கல்வெட்டாகப் பதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோவிலில் 11.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9 நிலை ராஜகோபுரம் கட்டப்படும் என்பது உட்பட 164 அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.