அமெரிக்காவில், கருக்கலைப்பை குற்றமாக்கும் சட்டவரைவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக 61 மாடி கட்டிடத்தில் ஸ்பைடர் மேன் போல் ஏறிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
அமெரிக்க உச்ச நீதிமன்றம், கருக்கலைப்பை குற்றமாக்கும் சட்டவரைவை இயற்றி வருவதாக வெளியான தகவலை கண்டித்து அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மேய்சன் டெஸ்சாம்ப்ஸ் (Maison DesChamps) என்ற 22 வயது கல்லூரி மாணவர், கருக்கலைப்புக்கு எதிரான தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவதற்காக சான் பிரான்சிஸ்கோ நகரின் உயரமான கட்டிடமாக கருதப்படும் Salesforce tower மீது ஸ்பைடர் மேன் போல் ஏறினார். போலீசாரின் தொடர் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் 1,070 அடி உயர கட்டிடத்தில் ஏறிய டெஸ்சாம்ப்ஸை மாடியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.