வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: கிரிக்கெட் அகடாமி துவங்குவதற்காக 33 ஆண்டுகளுக்கு முன் மஹாராஷ்டிரா அரசு தனக்கு வழங்கிய அரசு நிலத்தை மீண்டும் அரசிடமே திருப்பி அளித்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், 72. கிரிக்கெட்டில் இவரது சாதனையை பாராட்டி மஹாராஷ்டிரா வீட்டு வசதி மேம்பாட்டு ஆணையம் மும்பை பந்த்ரா என்ற பகுதியில் 1980-ம் ஆண்டு, 21 ஆயிரத்து 348 சதுரடி நிலம் ஒதுக்கியது. இந்த நிலத்தி்ல் கிரிக்கெட் அகடாமி துவங்கி இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிட திட்டமிட்டிருந்தார். எனினும் அவரால் திட்டமிட்டபடி துவங்க முடியாத நிலை ஏற்பட்டது.
அரசு ஒதுக்கிய நிலம் எவ்வித பயன்பாடின்றி இருந்ததையடுத்து 2019-ல் அரசு நிலத்தை மீண்டும் அரசிடம் ஒப்படைக்க கோரி மஹாராஷ்டிரா வீட்டு வசதி மேம்பாட்டு ஆணையம் கவாஸ்கருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதையடுத்து தனக்கு அரசு நிலம் ஒதுக்கிய நிலத்தை அரசிடமே ஒப்படைப்பதாக சம்மதம் தெரிவித்து முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதன் மூலம் 33 ஆண்டுகளுக்கு முன் அரசு ஒதுக்கிய நிலத்தை எவ்வித ஆக்கிரமிப்பும் செய்யாமல் மீண்டும் அரசிடமே ஒப்படைத்தார் கவாஸ்கர் .
Advertisement