அறநிலையத்துறை மானியக்கோரிக்கையில் 165 அறிவிப்புகளை அமைச்சர் சேகர் பாபு இன்று வெளியிட்டார். அதில்,
52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் வள்ளலார் முப்பெரும் விழா நடத்தப்படும்.
தமிழ் மூதாட்டி ஒளவையாருக்கு ரூ.1 கோடியில் மணிமண்டபம்; 3 நாட்கள் அரசு விழா நடத்தப்படும்.
மயிலாப்பூர், நெல்லை, தஞ்சை, திருவண்ணாமலை கோயில்களில் மகாசிவராத்திரியன்று மாபெரும் விழா நடத்தப்படும்.
27 திருக்கோயில்களில் ரூ.80 கோடியில் புதிய திருமண மண்டபங்கள் அமைக்கப்படும்.
அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களுக்கு அர்ச்சனை கட்டணத்தில் 60% பங்குத்தொகை தரப்படும்
தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்க சிறப்புக் கட்டணச்சீட்டுகள் அறிமுகம்.
ஒருகால பூஜை திட்டத்தில் நிதி வசதியற்ற மேலும் 2,000 கோயில்களுக்கு அரசு மானிய திட்டம் விரிவுப்படுத்தப்படும்.
27 திருக்கோயில்களில் ரூ.80 கோடியில் புதிய திருமண மண்டபங்கள் அமைக்கப்படும்
கோயில்களில் திருமணம் செய்யும் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் கோயில் சார்பில் புத்தாடை வழங்கப்படும்
103 திருக்கோயில்களில் பாதுகாப்பு அறை கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 8,693 உலோக சிலைகள், 23 உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது
இந்த வருடத்திலிருந்து யானைகளுக்கு மாதம் இருமுறை மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படும். திருக்கோயில்களில் பாதுகாக்கப்படும் 28 யானைகளுக்கும் மற்றும் மடங்களில் பாதுகாக்கப்படும் 6 யானைகளுக்கும் சிறப்பு இயற்கை உணவுகள் வழங்கப்படும்
அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயிலில் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது
கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி 2021 முதல் ஏப்ரல் 25-ம் தேதி 2022 வரை 126 திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சிறப்பாக குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது
பாரம்பரியமிக்க திருக்கோவில்களை பழமை மாறாமல் பாதுகாக்கும் பணியில் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், கட்டடக்கலை பாதுகாப்பு வல்லுநர்கள் பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 84 வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர். திருக்கோவில்களுக்கு தேவையான ஒருங்கிணைந்த பெருந்திட்டம் தயாரிப்பதற்கு இந்த வல்லுநர்களில் ஒருவரை திருக்கோவில் நிர்வாகம் பயன்படுத்திக்கொள்ளலாம்
கடந்த மே மாதம் 7-ம் தேதி 2021-ம் ஆண்டு முதல் மார்ச் 2022-ம் வரையிலான காலத்தில் 133 திருக்கோயிலுக்கு சொந்தமான 720.83 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன
பாரம்பரியமிக்க திருக்கோயில்களை புனரமைப்பு மற்றும் பாதுகாத்தல் பணி மேற்கொள்ளும்போது கருத்துரு வழங்குவதற்காக, இந்திய தொல்லியல் துறையில் அலுவலர்களாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களில் 20 பேர் ஒப்பந்த அடிப்படையில் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ராமேஸ்வரம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய மூன்று திருக்கோவில்களில் முழு நேர அன்னதான திட்டம் இந்த ஆண்டு தொடங்கப்படும்
தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில் 2 கோடி மதிப்பீட்டில் திருப் பணிகள் மேற்கொள்ளப்படும்
மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் க்கு சொந்தமான இடத்தில் எட்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம்
உள்ளிட்ட 165 அறிவிப்புகள் இந்து சமய அறநிலையத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM