ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை 6 மாதங்களுக்குள் நிறுத்த வேண்டும் என அதன் தலைவர் உர்சுலா வான் டெர் (Ursula von der) தெரிவித்துள்ளார்.
பல ஐரோப்பிய நாடுகள், ரஷ்யாவில் இருந்து கடல் வழியாகவும், குழாய் மூலமாகவும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகின்றன. ரஷ்யாவிடம் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், கூடுதல் தடைகள் விதிப்பது குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பேசிய உர்சுலா வான் டெர் (Ursula von der), ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை 6 மாதத்திலும், பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி இறக்குமதி செய்வதை ஆண்டு இறுதிக்குள்ளும் நிறுத்த வேண்டும் என முன்மொழிந்தார்.
சில நாடுகள் தங்கள் எண்ணெய் தேவைகளுக்கு ரஷ்யா-வை முழுவதுமாக சார்ந்துள்ளதால், இது பெரும் விவாதப் பொருள் ஆகி உள்ளது.