திருமணத்தைத் திட்டமிடுவது என்பது நினைக்கும் போதே மிகவும் சோர்வை தரக்கூடியது. அதிலும் சரியான பிரைடல் லெஹெங்கா செட்டைக் கண்டுபிடிப்பது மணப்பெண்ணுக்கு கூடுதல் சிக்கலானா வேலை. ஆனால் கவலைப்பட வேண்டாம், உங்கள் சிறந்த நாளில் நீங்கள் தனித்து நிற்பதை உறுதிசெய்யும் லெஹெங்கா செட்டைக் கண்டறிய உதவும் சில குறிப்புகள் இங்கே உள்ளன.
தற்போதைய டிரெண்ட் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
சீசன் மற்றும் சமீபத்திய டிரெண்டுக்கு ஏற்ப பிரைடல் லெஹங்கா ஸ்டைல்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. “இதை வைத்து, திருமண நாளுக்கு குறைந்தது ஆறு மாதங்களுக்கு முன்பே லெஹெங்காவைத் தேர்ந்தெடுப்பது நல்லது” என்கிறார் ஐடீப்ஸ் லண்டன் நிறுவனர் ஆலியா தீபா.
பட்ஜெட் போடுங்கள்
டிமாண்ட் உள்ள டிரெண்டுகள் மற்றும் லெஹெங்காவை ஆராய்வது, பட்ஜெட்டை அமைக்க உதவுவது மட்டுமின்றி, எதை எதிர்பார்க்கலாம் என்பதைப் பற்றியும் நம்மை தயார்படுத்தும்.
ஒரு துல்லியமான பட்ஜெட்டைக் கொண்டு வர, நீங்கள் விரும்பும் வகை லெஹெங்காவிற்கு குறைந்தபட்ச விலையைப் பெற, ஒரு சில கடைகளில் ஏறி இறங்கலாம்,” என்று அவர் பரிந்துரைத்தார்.
உங்கள் தோல் மற்றும் உடல் வகையை அறிந்து கொள்ளுங்கள்
லெஹெங்காவை வாங்குவதற்கு முன், உங்கள் உடல் மற்றும் தோலின் வகையை அறிந்துகொள்வது முக்கியம், எனவே இரண்டையும் பூர்த்தி செய்யும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
லெஹங்கா துணி மீது கவனத்துடன் இருங்கள்
ஃபேப்ரிக் தேர்வின் தரமானது’ ஸ்டைல் பேட்டர்ன்கள், ரிச் மற்றும் ஹெவி டிசைன் போன்ற வடிவமைப்புகளின் அடிப்படையில் வேறுபடுகிறது.
“ஒவ்வொரு லெஹெங்காவும் வெவ்வேறு துணிகளைக் கொண்டிருப்பதால், உங்கள் திருமண நாளில் உங்களுக்கு வசதியாக இருக்கும் பொருத்தமான துணியைக் கண்டுபிடிப்பது முக்கியம்,” என்று தீபா கூறினார்.
ஜூவல்லரி
சரியான லெஹெங்காவைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர, உங்கள் அவுட்-ஃபிட்டை நகைகளுடன் பொருத்துவது சமமாக முக்கியமானது.
ஆல்ட்டரேஷனுக்கு நேரத்தை ஒதுக்குங்கள்
கடைசி நேரத்தில் ஃபிட்டிங் சிக்கல்களைத் தவிர்க்க ஒருவர் ஆல்ட்டரேஷனுக்கு போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், உங்கள் திருமண நாளுக்கு முன் உங்கள் ஆடையை முயற்சிப்பதும் முக்கியமானது.
ஒட்டுமொத்த ஆடைகளில் கவனம் செலுத்துங்கள்
திருமண ஷாப்பிங்கின் போது மக்கள் செய்யும் பொதுவான தவறுகளில் ஒன்று, லெஹங்காவுக்கு முன்னுரிமை கொடுப்பதும், ரவிக்கை மற்றும் துப்பட்டாவுக்கு குறைந்த கவனம் செலுத்துவதும் ஆகும், என்று தீபா கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“