1999 ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமானது தொடங்கி இன்றைக்கு வரைக்கும் த்ரிஷாவின் சினிமா பயணம் பிரமிப்பானது. த்ரிஷாவின் பிறந்தாள் இன்று. அவரைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ.
அம்மா செல்லமாக அழைப்பது த்ரிஷ். நண்பர்கள் கூப்பிடுவது ஹனி. ஹீரோக்கள் அழைப்பது ட்ராஷ். ரசிகர்களுக்கு குயின். த்ரிஷா ரிஷப ராசிக்காரர். இந்த ராசிக்காரர்களுக்கே கொஞ்சம் பிடிவாதம் இருக்குமாம்.
சர்ச் பார்க் கான்வென்டில் ஸ்கூல் படித்துவிட்டு, எத்திராஜில் இரண்டு வருடங்கள் மட்டும் பி.பி.ஏ படித்தார். அதற்குப் பிறகு, சினிமா… சினிமா… சினிமா… மட்டும்தான்.
அவ்வப்போது வெளிநாடுகளுக்குப் போய் ஸ்கை டைவிங், பங்கி ஜம்பிங் என விளையாடுவது பிடிக்கும். அவர் பத்திரமாகத் திரும்பும் வரும் வரைக்கும் அம்மா உமா கிருஷ்ணன் பயத்துடன் காத்திருப்பாராம்.
த்ரிஷாவுக்கு எப்பவும் பிடித்தது `விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் பாட்டுக்கள் தான். அவரின் பேவரைட் இசை அமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான்.
நண்பர்கள் பட்டாளம் எக்கச்சக்கம். ஷூட்டிங் இல்லை என்றால் நண்பர்கள் உடன் அவுட்டிங் போவார். தியேட்டர், ஷாப்பிங் என பிஸியாகவே இருப்பார்.
நிறைய நடிகர்களோடு நடித்துவிட்டாலும் த்ரிஷாவுக்கு பிடித்த நடிகர் கமல்தான். ரஜினி உடன் நடிக்கும் கனவு பேட்டை படம் மூலமாக நிறைவேறியது.
சினிமாவில் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் பிரியதர்ஷன் மீது த்ரிஷாவுக்கு மிகுந்த மரியாதை உண்டு. புத்தாண்டில் முதல் ஆசீர்வாதம் அவரிடமிருந்து பெறுவாராம்.
நாய்கள்மீது தனிப்பிரியம். தெருநாய்களின்மீது தனிப்பட்ட கருணை உண்டு. தெருவிலிருந்து நாய்களை வீட்டிற்கு அழைத்து வந்துவிடுவார். பராமரிப்பதும் அவற்றோடு விளையாடுவதும் த்ரிஷாவுக்குப் பிடித்தமானது.
பி.எம்.டபிள்யூ 5 சீரிஸ் கார் வைத்திருக்கிறார். காரில் பிடித்த வண்ணம் கருப்பு. மற்றபடி பிடித்த நிறம் பிங்க்.
தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவின் குயின் என பெருமித்தப்படும் அளவுக்கு திரைப்படங்களைக் கொடுத்தவர். இப்போ வெப் சீரிஸ்களிலும் களமிறங்கி இருக்கிறார்.
23 Years Of Trishaism கொண்டாட ரசிகர்கள் உற்சாகமாக இருக்கின்றனர். பொன்னியின் செல்வன் படத்தில் அவரைக் காணக் காத்திருக்கின்றனர். எப்போதும் நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டே இருங்கள். ஹாப்பி பர்த்டே, த்ரிஷா!