அடிதூள்.. $100 பில்லியன் வருவாய்.. வரலற்று சாதனை படைத்த முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ்..!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இன்று மார்ச் காலாண்டு முடிவுகள் உடன் 2021-22ஆம் நிதியாண்டுக்கான மொத்த வருவாய், லாப அளவீடுகளைத் தனது காலாண்டு முடிவுகளில் அறிவித்தது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. முதல் முறையாக ஒரு இந்திய நிறுவனம் ஒரு வருடத்தில் 100 பில்லியன் டாலர் வருவாய் அளவீட்டை பதிவு செய்து புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

வெயிலுக்கு இதமா ஒரு கூலிங்கிளாஸ்.. இதையும் விட்டு வைக்காத முகேஷ் அம்பானி..!

வருவாய்

வருவாய்

மார்ச் காலாண்டில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது ஆப்ரேஷன்ஸ் மூலம் சுமார் 2.11 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வருவாயை பெற்று அசத்தியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் 36 சதவீதம் அதிகமாகும்.

மார்ச் 31 உடன் முடிந்த நிதியாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சுமார் 7.36 லட்சம் கோடி ரூபாய் மொத்த வருவாயாக ஈட்டியுள்ளது.

துறைவாரியான வருமான அளவீடு

துறைவாரியான வருமான அளவீடு

மேலும் துறைவாரியான வருமான அளவீடுகளைப் பார்க்கும் போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின்

எண்ணெய் மற்றும் ரசாயன வணிகப் பிரிவின் வருவாய் கடந்த ஆண்டு ரூ.1.01 லட்சம் கோடியாக இருந்த நிலையில் தற்போது ரூ.1.45 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

இதேபோல் எண்ணெய் எரிவாயு வணிகம் ரூ.848 கோடியில் இருந்து ரூ.2,008 கோடியாக உயர்ந்துள்ளது.

ரீடைல் வர்த்தகப் பிரிவு வருவாய் ரூ.47,085 கோடியில் இருந்து ரூ.58,109 கோடியாக உயர்ந்துள்ளது. 23.3 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

டிஜிட்டல் சேவைகளின் வருவாய் ரூ.22,628 கோடியில் இருந்து ரூ.27,196 கோடியாக உயர்ந்துள்ளது.

 

லாபம்
 

லாபம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2022ஆம் நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டில் நிகர லாப அளவீடுகள் 22.4 சதவீதம் உயர்ந்து ரூ.16,203 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும் வருடாந்திர அடிப்படையில் கணக்கிடும் போது வரிக்கு பிந்தைய லாப அளவுகள் 26.2% அதிகரித்து, 67,845 கோடி ரூபாயாக உள்ளது

 ஈவுத்தொகை

ஈவுத்தொகை

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் இயக்குநர்கள் குழு, மார்ச் 31, 2022 அன்று முடிவடைந்த நிதியாண்டுக்கு தலா ரூ.10 முக மதிப்பு கொண்ட ரிலையன்ஸ் பங்கு உரிமையாளர்களுக்கு ரூ.8 ஈவுத்தொகை அளிக்கப் பரிந்துரைத்துள்ளது. இந்தத் தொகை எப்போது பங்குதாரர்களுக்குச் செலுத்தப்படும் என்பதை வருடாந்திர கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.

 ரிலையன்ஸ் ரீடைல்

ரிலையன்ஸ் ரீடைல்

ரிலையன்ஸ் ரீடைல் மார்ச் காலாண்டில் 23.3 சதவீத வளர்ச்சியில் 58,109 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளது. ரிலையன்ஸ் ரீடைல் பண்டிகை கால வர்த்தகத்தால் எப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

 ரிலையன்ஸ் ரீடைல் விரிவாக்கம்

ரிலையன்ஸ் ரீடைல் விரிவாக்கம்

மார்ச் காலாண்டில் ரிலையன்ஸ் ரீடைல் புதிதாக 793 கடைகளைத் திறந்து 3.1 மில்லியன் சதுர அடி கிடங்கு மற்றும் fulfillment சென்டர்களைப் புதிதாகச் சேர்த்துள்ளது. வலுவான தயாரிப்புகள் மற்றும் கவர்ச்சிகரமான சலுகைகள் காரணமாக அனைத்து டிஜிட்டல் வர்த்தகத் தளங்களிலும் தினசரி ஆர்டர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாக்கியுள்ளது.

எண்ணெய் வர்த்தகம்

எண்ணெய் வர்த்தகம்

எப்போதும் போலவே இந்தக் காலாண்டிலும் எண்ணெய், எரிவாயு மற்றும் பெட்ரோ கெமிக்கல் வர்த்தகம் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சர்வதேச சந்தை விலைக்கு நிகராக உயராத காரணத்தால் அதிகளவிலான வருமானத்தைப் பெற முடியவில்லை. ஆனால் New Energy மற்றும் New Materials பிரிவு வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதில் முகேஷ் அம்பானி மிகழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார்.

 ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

மார்ச் காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோவின் மொத்த டேட்டா டிராப்பிக் அளவு 24.6 பில்லியன் ஜிபி, இது கடந்த வருடத்தைக் காட்டிலும் 45.7 சதவீதம் அதிகம். இதேபோல் வாய்ஸ் டிராபிக் 1.2 டிரில்லியன் நிமிடமாக உயர்வு இது கடந்த ஆண்டை விடவும் 16.8 சதவீதம் அதிகம். மேலும் ஜியோவின் ARPU அளவு 21.3 சதவீதம் அதிகரித்து 167.6 ரூபாயாக உள்ளது.

ஜியோஃபைபர், 5ஜி சேவை

ஜியோஃபைபர், 5ஜி சேவை

ஜியோஃபைபர் (JioFiber) இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகளில் நாட்டின் மிகப்பெரிய பிராட்பேண்ட் சேவை வழங்குநராக உயர்ந்துள்ளது. மேலும் ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவை வழங்க இந்தியாவில் 8 மாநிலத்தில் சோதனை செய்து தயாராக உள்ளது என இந்தக் காலாண்டு முடிவில் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

RIL Q4 Results: FY22 revenue crosses $100 billion; Historic achievement by a Indian company

RIL Q4 Results: FY22 revenue crosses $100 billion; Historic achievement by a Indian company அடிதூள் 2.11 லட்சம் கோடி வருமானம்.. அசத்தும் அம்பானியின் ரிலையன்ஸ்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.