இழப்பை தவிர்க்க அரசுப் பேருந்துகளின் இயக்கம், பராமரிப்பு ஆகியவற்றைத் தனியாருக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தமிழகப் போக்குவரத்துத் துறைக் கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.
பேருந்துக் கொள்முதல், உதிரிப் பாகங்கள் வாங்குதல், இயக்கம், பராமரிப்பு ஆகியவற்றில் மொத்த ஒப்பந்தம் அடிப்படையிலோ அல்லது பொதுத்துறை தனியார் கூட்டு முறையிலோ செயல்பட உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் நிர்வாகம், வருவாய் வரவு ஆகியன போக்குவரத்துக் கழகங்களிடமே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் ஆறாயிரத்து 488 கோடி ரூபாய் வருவாய் குறைந்ததை அடுத்து இத்தகைய முடிவுக்கு அரசு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பேருந்துகளின் இயக்கத்துக்காகக் கிலோமீட்டருக்கு இவ்வளவுத் தொகை எனத் தனியார் நிறுவனங்களுக்கு அரசு வழங்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.