சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று ஆதிதிராவிடர் பழங்குடியின நலத்துறை மானியக் கோரிக்கையின் போது 33 புதிய அறிவிப்பைகளை அத்துறையின் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வெளியிட்டார். அதன்படி:
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த 10 ஆயிரம் இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள 10 கோடி ரூபாய் செலவில் பயிற்சிகள் வழங்கப்படும்.
2,000 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 2.50 கோடி ரூபாய் செலவில் தொழில் திட்டங்கள் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படும்.
துரித மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் ஆதி திராவிடர், பழங்குடியின விவசாயிகள் மின் இணைப்பு பெற 90 சதவீதம் மானியம், ரூ.23.37 கோடி செலவில் வழங்கப்படும்.
வீடற்ற 500 தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்படும் வீடுகள் வாங்கிட மானியம் வழங்கப்படும்.
200 நிலமற்ற ஆதி திராவிட மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் நிலம் வாங்கிட 10 கோடி செலவில் மானியம் வழங்கப்படும்.
சேத்தியாதோப்பு, குளித்தலை, மீன்சுருட்டி, திருவண்ணாமலை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் பழுதடைந்துள்ள 10 ஆதி திராவிடர் பள்ளி மாணவர்கள் விடுதிகளுக்கு புதிய விடுதிக் கட்டடங்கள் கட்டப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கக்கப்பட்டுள்ளது
இதையும் படியுங்கள்…
இதற்கு மேல் பேசி அரசியலாக்க விரும்பவில்லை- எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்