டெல்லி: இந்தியாவில் ஒட்டுமொத்தமாக குழந்தை பிறப்பு விகிதம் பெண் ஒருவருக்கு 2.2 என்ற எண்ணிக்கையிலிருந்து 2-ஆக குறைந்துள்ளது. முதுமை உள்ளிட்ட காரணங்களால் மரணமடைவோர் எண்ணிக்கையை விட பிறப்பு விகிதம் குறைந்து விட்டதாக தேசிய குடும்ப நல ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் மரணமடைவோர் எண்ணிக்கையை ஈடுசெய்ய வேண்டுமானால் பிறப்பு விகிதம் பெண் ஒருவருக்கு 2.1 ஆக இருக்க வேண்டும்.