வத்தலகுண்டு அருகே முத்தாலம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற இரட்டை மாட்டுவண்டி பந்தயத்தில் 100க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப் பாய்ந்தன.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே ஜீ.தும்மலப்பட்டி கிராமத்தில் உள்ள பழமையான ஸ்ரீ முத்தாலம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவையொட்டி இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
இதில், பெரிய மாடு, நடுமாடு, சின்ன மாடு, பூஞ்சிட்டு ஆகிய நான்கு வகையான காளைகள் போட்டியில் பங்கேற்றனர் காளைகளுக்கு ஏற்ப தூரங்கள் நிர்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன இதில் பங்கேற்ற காளைகள் கணவாய்பட்டி – வத்தலகுண்டு சாலையில் சீறிப்பாய்ந்து தங்கள் இலக்கை எட்டின முதல் நான்கு பரிசுகளை வென்றன.
இரட்டை மாட்டுவண்டி பந்தயத்தை சாலையின் இருபுறமும் பொதுமக்கள் திரண்டு வந்து கண்டு ரசித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM