உங்களிடம் ஒன்று கேட்பேன்…செய்வீர்களா? செய்வீர்களா..? வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் பிரதமர் மோடி கலகல!| Dinamalar

சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நமது பிரதமர் நரேந்திர மோடி, டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் வாழும் இந்தியர்களை மாலை விருந்தில் சந்தித்தார். அவர்களிடைய கலகலவென சிரித்தும் கலாய்த்தும் மோடி பேசியதை அப்படியே இங்கு தருகிறோம்…

மோடி: நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா

மக்கள் (கோரசாக): யெஸ்…மோடி ஜி

மோடி: உறுதியாக…?

மக்கள்: ஆமா…நாங்கள் உங்களோடு இருக்கிறோம்
(சிரித்தவாறே ஒரு நிமிடம் அப்படியே நிற்கிறார் மோடி)
மக்கள்: நாங்கள் எல்லாம் உங்கள் ரசிகர்கள்

மோடி: (கொஞ்சலாக) நான் உங்களிடம் கேட்டு நீங்கள் மறுத்து விட்டீர்கள் என்றால்…

மக்கள்: உறுதியாக நாங்கள் செய்வோம்

மோடி: (கெஞ்சலாக) நான் சொல்வதை நீங்கள் ஒப்புக்கொண்டு பின்னர் செய்யவில்லை என்றால்…

மக்கள்: நாங்கள் செய்வோம்

மோடி: உறுதியாக செய்வீர்களா…

மக்கள்: செய்வோம்

மோடி: எத்தனை பேர் நான் கேட்பதை செய்வீர்கள்

மக்கள்: நாங்கள் எல்லோரும்…
(கூட்டத்தினர் மொத்தமாக கரகோஷம்)

மோடி: நாம் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம்…(சிறிது இடைவெளி விட்டு) எத்தனை பேருக்கு தெரியும்

மக்கள்: மோடிஜி…நீங்கள் முதலில் சொன்னதை கேளுங்கள்…
(மோடி சிரித்தவாறே ஒரு நிமிடம் மவுனமாக நிற்கிறார்)
(அரங்கம் எங்கும் மோடி…மோடி…என்று குரல்)

latest tamil news

மோடி: நீங்கள் எல்லாம் ஏற்றுக்கொள்வீர்கள் என்றால் சொல்கிறேன்

மக்கள்: (குரலை குறைத்தவாறு) மோடி…மோடி..

மோடி: உங்கள் பேச்சின் சப்தம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது…நான் சொல்வது சரி தானா

மக்கள்: இல்லை…இல்லை

மோடி: அப்படி என்றால் நான் சொல்கிறேன். உலகமெங்கும் வாழும் இந்திய மக்களை நான் விரும்பி கேட்டுக்கொள்வதெல்லாம்…என் விருப்பம் என்னவென்றால்…

(உடனே ஒரு பெண் இடைமறித்து சப்தமாக..)

உங்கள் கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றினால், நீங்கள் எங்களோடு செல்பி எடுக்க வேண்டும்.

(அந்த பெண்ணை பார்த்து சிரித்துக்கொண்டே மோடி…)

பிளீஸ்…கொஞ்சம் உங்கள் குரலை குறையுங்கள்…நீங்கள் அங்கிருப்பதை எல்லோரும் பார்த்து விட்டார்கள்!

(அரங்கில் பலத்த கைத்தட்டல்; மோடியும் சிரித்துக்கொண்டே இருக்கிறார். சில நிமிட இடைவெளிக்குப்பிறகு…)

மோடி: நான் உங்களிடம் பெரிதாக ஒன்றும் கேட்கப்போவதில்லை. ஒரு சிறிய விஷயம்…செய்வீர்களா

latest tamil news

மக்கள்: உறுதியாக செய்வோம்

மோடி: உறுதியாக…?

மக்கள்: ஆம் உறுதியாக!

மோடி: அப்படி என்றால் சொல்கிறேன். (குரலை உயர்த்தி) இந்தியா ஒரு பெரிய நாடு; இந்தியாவிற்காக நாம் பெருமை கொள்கிறோம். உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு இந்தியரும், ஓராண்டிற்கு 5 இந்தியர்கள் அல்லாத நண்பர்களை (மீண்டும் சொன்னார்) ‛இந்தியர் அல்லாதவரை’, இந்தியாவிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

(அரங்கில் பலத்த கைத்தட்டல்…சரி சரி என்று கூறி மக்கள் கரகோஷம்)

மோடி: அவர்களை இந்தியா செல்லுங்கள் என்று துாண்டுவீர்களா…இதோ உங்கள் இலக்கு ஆரம்பித்து விட்டது. ஆண்டு தோறும் ஒவ்வொரு பேரும் 5 பேரை இந்தியாவிற்கு அனுப்பி வையுங்கள். இந்தியாவின் தென் மாநிலங்களுக்கு, தமிழ் நாட்டிற்கு, ஒரிசாவிற்கு, வங்கத்திற்கு செல்லுங்கள் என்று சொல்லுங்கள். நண்பர்களே…உங்கள் பலம் உங்களுக்கு தெரியுமா? உலகில் நாம் எவ்வளவு பெரிய வலிமையான நாடு தெரியுமா…

(அடுத்து கிண்டலாக…குரலை தாழ்த்தி..)

அங்கே செல்ல நேரடி விமானம் இல்லை என்றெல்லாம் சொல்லி பொறுப்பை தட்டிக்கழிக்க கூடாது. சோம்பேறித்தனமான இந்த வேலை எல்லாம் கூடாது.

(குரலை உயர்த்தி…வேகத்துடன்)

விமானங்கள், போக்குவரத்து வசதி இல்லாத அந்த காலத்திலேயே பல ஆயிரம் கிலோ மீட்டர் நடந்து மக்கள் என் நாட்டிற்கு வந்திருக்கிறார்கள்.

(அரங்கு முழுக்க கரகோஷம்)

அந்த மாதிரி ஒரு நிலையை மீண்டும் நாம் உருவாக்க வேண்டும். அப்படி உருவானால் உலகில் எல்லோரும் செல்ல வேண்டிய ஒரே இடமாக இந்தியா இருக்கும்…

(பலத்த கைத்தட்டல்)

latest tamil news

எல்லோரும் சொல்வார்கள்…‛இந்தியாவிற்கு செல்லுங்கள்’. இது துாதரகத்தின் வேலை அல்ல

(மக்கள் சிரிப்பு)

இது துாதரக அதிகாரிகள் வேலை அல்ல. இந்திய பிரதிநிதிகளான உங்கள் வேலை.

(பலத்த கைதட்டல்)

துாதரக அதிகாரி ஒருவர் தான்; ஆனால் பிரதிநிதிகள் நீங்கள் லட்சக்கணக்கானோர்.

(பலத்த கரகோஷம்)

நீங்கள் நான் சொன்னதை செய்வீர்களா

மக்கள்: செய்வோம்…செய்வோம்!

மோடி: இப்போது உங்கள் குரலில் உள்ள உறுதி எனக்கு கேட்கிறது!

இவ்வாறு ஜாலியாக சிரித்து, சிரித்து ஆனால் சீரியஸாக பேசி, வெளிநாட்டு வாழ்மக்களுக்கு தன்னம்பிக்கையூட்டி, அவர்களுக்கு இலக்கு தந்து, உலக மக்கள் எல்லோரும் இந்தியாவுக்கு சுற்றுலா வர அழகான ஐடியா செய்திருக்கிறார் பிரதமர் மோடி. அதிலும் கடல்கடந்து சென்று பேசிய போது, மொத்தமே 3 மாநிலங்களின் பெயர் சொன்னதில் தமிழ்நாட்டை குறிப்பிட்டது, தமிழ்நாட்டிற்கு நிச்சயம் சிறப்பு சேர்க்கும். அவர் தமிழ்நாடு மீது கொண்டுள்ள பாசத்தையும் வெளிப்படுத்தியது.
– நமது சிறப்பு நிருபர் –

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.