உலகின் மூன்றாவது உயரமான சிகரத்தின் உச்சியை தொட முயன்ற இந்தியர் உயிரிழப்பு !

காத்மண்டு,
உலகின் மிக உயரமான மூன்றாவது சிகரமாக இமயமலையில் உள்ள கஞ்சன்ஜங்கா சிகரம் உள்ளது. இது இந்திய-நேபாள எல்லையில் அமைந்துள்ளது. இந்த சிகரத்தை பல மலையேற்ற வீரர்கள் அடைந்து சாதனை படைத்து உள்ளனர்.
இந்த நிலையில், இந்தியாவை சேர்ந்த 52 வயதான நாராயணன் ஐயர் என்பவர் கஞ்சன்ஜங்கா சிகரத்தின் உச்சிக்கு அருகே ஏறுக்கொண்டிருக்கும் போது உயிரிழந்ததார். இந்த ஆண்டு நேபாளத்தில் இறந்த மூன்றாவது மலையேற்ற வீரர் நாராயணன் ஐயர் ஆவார்.

8586 மீட்டர் உயரம் கொண்ட இந்த கஞ்சன்ஜங்கா சிகரத்தில் உச்சியில் 8,200 மீட்டர் உயரத்தில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மிகவும் சோர்வாக இருந்ததால், மேற்கொண்டு பயணத்தை தொடர முடியாமல் சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
கடந்த மாதம், 8,167 மீட்டர் உயரமுள்ள தௌலகிரி மலையில் கிரீஸ் நாட்டை சேர்ந்த மலையேற்ற வீரர் ஒருவரும், சில நாட்களுக்குப் பிறகு, எவரெஸ்ட் சிகரத்தில் நேபாளி ஒருவரும் மலையேறும் போது உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.