எச்சில் இலையை திறந்து பார்த்ததால் கோடிகளில் கொட்டிய பணம்! இலங்கை, லண்டன் மற்றும் உலககெங்கும் சாதித்த தமிழர்


தூத்துக்குடி மாவட்டம் புன்னையடி கிராமத்தில் மிக மிக ஏழைக்குடும்பம் ஒன்றில் பிறந்தார் ராஜகோபால். வறுமை காரணமாக 7 ஆம் வகுப்பிலேயே படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டு ஓர் உணவகத்தில் டேபிள் துடைக்கும் வேலையைச் செய்யத் தொடங்கினார்.

அப்போதெல்லாம் இரவில் கட்டாந்தரையில் படுத்துறங்கியவர் தான். அங்கிருக்கும் போது தான் தேநீர் போடக் கற்றுக் கொண்டதாக ராஜகோபால் கூறியதுண்டு.

தொடர்ந்து ஒரு மளிகைக் கடையில் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார்.

அங்கே கிடைத்த அனுபவங்களைக் கொண்டு தன் அப்பா மற்றும் மைத்துனரின் உதவியுடன் சொந்தமாகத் தனியாக ஒரு மளிகைக்கடையைத் துவக்கினார்.

முதல்முயற்சி என்பதால் பெரும் சவாலாகத்தான் இருந்திருக்கிறது.

அத்தனையையும் தனது தன்னம்பிக்கையால் மட்டுமே வெற்றிகரமாக எதிர்கொண்டா ராஜகோபால்.

மளிகைக்கடையில் 1979 ஆம் ஆண்டில் ஒரு நாள் தனது விற்பனையாளர்கள் ஒருவருடன் நடந்த உரையாடலின் விளைவாக ராஜகோபால் கண்டடைந்ததுதான் இன்று உலகம் முழுக்க 33 கிளைகளுடன், வெளிநாடுகளில் 45 க்கும் மேற்பட்ட கிளைகளுடன் நிமிர்ந்து நிற்கும் சரவணபவன் எனும் ருசிகரமான ஆலவிருட்சம்.

இதையும் படிங்க: மகளுக்கு ரூ.13 கோடியில் தந்த பரிசு! கேலி, கிண்டலை கண்டுகொள்ளாமல் சாதித்த சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் அருள்!

இலங்கை, லண்டன், கனடா, பாரீஸ் என பல இடங்களில் சரவணபவன் கிளைகள் உள்ளது.

1981 ஆம் ஆண்டுச் சரவணபவன் உணவகம் தொடங்கப்பட்டது.
சரவணபவனின் வெற்றியின் ரகசியம் நல்ல தரமான உணவை பரிமாறுவதில் மட்டுமில்லை. அங்கு வேலை செய்யும் பணியாளர்களை அக்கறையுடன் கவனித்துக் கொள்வதிலும் மற்றும் பணியிடத்தின் உயர் தரத்திலும் உள்ளது.

மேலும் வாடிக்கையாளர்களை திருப்தி படுத்துவதையே ராஜகோபால் முதன்மையான நோக்கமாக கொண்டிருந்தார். அதாவது, வாடிக்கையாளர்கள் சாப்பிட்ட பின்னர் எச்சில் இலைகளை திறந்து அவர் பார்ப்பாராம், இது தான் அவரை பின்னாளில் கோடீஸ்வரர் ஆக்கியது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம்! அதில் மிச்சம் அதிகமாக வைக்கப்பட்டு  உள்ள உணவுகள் வாடிக்கையாளர்களை அதிகம் கவரவில்லை என உறுதி செய்து அதை அடிக்கடி சமைப்பதை தவிர்த்துவிடுவார், அதிகம் விரும்பி சாப்பிடப்படும் உணவுகளை இன்னும் சுவையாக தயார் செய்ய ஊழியர்களுக்கு உத்தரவிடுவாராம்.

இப்படி தொழிலை முன்னேற்றம் செய்ததால் சரவணபவன் மிக வேகமாக வளர்ந்து நம்பர் 1 உணவகம் என்ற பெயரை பெற்றது.

இன்று சரவணபவன் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 700 மில்லியன் டொலருக்கு மேல் உள்ளது.

இவ்வளவு பெருமைகளை கொண்ட கடும் உழைப்பாளி ராஜகோபால் பெண் சபலத்தால் சாந்தகுமார் கொலை வழக்கில் சிக்கினார்.
அதாவது ராஜகோபாலுக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இந்த நிலையில் ஜீவஜோதி என்ற பெண்ணின் தந்தை சரவணபவனில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

ஆனால் ஜீவஜோதியோ தான் டியூசன் படிக்கச் சென்ற இடத்தில் பிரின்ஸ் சாந்தகுமார் என்பவர் மீது காதல் வயப்பட, அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் ராஜகோபாலில் ஆஸ்தான ஜோதிடர்கள், ஜீவஜோதியை திருமணம் செய்து கொண்டால் புகழின் உச்சிக்கு சென்றுவிடலாம் என்று கூற, இதனால் அவரை திருமணம் செய்ய துடித்தார்.

ஆனால் அதற்கு ஜீவஜோதி மற்றும் பிரின்ஸ் மறுக்கவே, பிரின்ஸை கொலை செய்ய முடிவு செய்தார் ராஜகோபால்.

அதன் படி 2001-ஆம் ஆண்டு பிரின்ஸ் கொலை செய்யப்பட்டு கிடக்க, இதற்கு காரணம் ராஜகோபால் தான் என்று ஜீவ ஜோதி புகார் கொடுக்கிறார்.

ஆனால் ராஜகோபால் தரப்போ தொழில் போட்டி காரணமாக யாரோ செய்கின்ற சதி’ என்று ராஜகோபால் தரப்பினர் கூறிவந்தனர்.

இந்த வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்தவழக்கில் ராஜகோபால், அவரது மேலாளர் டே‌னிய‌ல், கா‌‌ர்மேக‌ம், ஹூசை‌ன், கா‌சி ‌வி‌ஸ்வநாத‌ன், த‌மி‌ழ்செ‌ல்வ‌ன், முருகான‌ந்த‌ம், சேது, ப‌ட்டுர‌ங்க‌ம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணை முடிவில், 2004-ஆம் ஆண்டு ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் தண்டனையும் 55 ல‌ட்ச‌ம் ரூபா‌ய் அபராதமு‌ம் ‌வி‌தி‌த்தது.

இந்த வழக்கிலிருந்து தப்ப வேண்டும் என்பதற்காக ராஜகோபால் தரப்பினர் ஜீவஜோதியிடம் சமாதானம் பேச முடிவு செய்துள்ளனர். ஆனால் அதற்கு ஜீவஜோதி உடன்பட மறுக்க, அதன் பின் அவரை கடத்த முடிவு செய்துள்ளனர்.

ஆனால் ஜீவஜோதியின் கிராமத்தினர் இதை கண்டுபிடித்துவிட்டதால், ஜீவஜோதியிடன் கடத்தல் முயற்சியும் கைவிடப்பட்டுவிடுகிறது. கடந்த 2009-ஆம் ஆண்டு வழக்கை விசாரித்து வந்த உயர்நீதிமன்றம் முதலில் கீழ் நிதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக 10 ஆண்டுகள் வழங்கிய சிறை தண்டனையை ஆயுள்தண்டனையாக வழங்கி உத்தரவிட்டது.

இதையடுத்து தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். அவர் வெளிநாடு செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது.

10 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜகோபால் மீதான ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் கடந்த 2019ல் உறுதி செய்தது.

ஆனால் அவர் உடல்நிலை மோசமாகவே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறலாம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் 2019 ஜூலை 18ஆம் திகதி ராஜகோபால் உயிரிழந்தார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.