என்ன செய்தார்கள் தமிழக எம்.பி.க்கள்? – மக்களவை உறுப்பினர்களின் செயல்பாடு; யார் முதலிடம்? 

சென்னை: மக்களவையில் எம்.பி.க்களின் செயல்பாடுகளை பிஆர்எஸ் இந்தியாவின் தரவுகளின்படி கடந்த 12 ஆண்டுகளாக மதிப்பிட்டு வரும் ப்ரைம் பாயின்ட் பவுண்டேஷன் 17வது மக்களவை தொடங்கியது முதல் தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடர் வரை மதிப்பிட்டு விவரங்களை வெளியிட்டுள்ளது. இதில் தமிழக எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்த விவரங்களும் வெளியாகியுள்ளன.

ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும், பிரைம்பாயிண்ட் பவுண்டேஷன் மற்றும் பி.ஆர்.எஸ் இந்தியா அளிக்கும் தரவுகளின்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆற்றிய பணிகளை செய்வு செய்து அறிக்கையாக வெளியிடுகிறது.

மக்களவையில் எம்.பி.க்களின் செயல்பாடுகளை ப்ரைம் பாயின்ட் ஃபவுண்டேஷன், கடந்த 12 ஆண்டுகளாக மதிப்பிட்டு வருகிறது. அந்த மதிப்பீட்டின்படி, ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவில் சிறப்பாகப் பணியாற்றிய எம்பி.க்களுக்கு ‘சன்சத் ரத்னா’ விருது வழங்கி கவுரவிக்கிறது. கடந்த 12 ஆண்டுகளில் 92 சிறந்த உறுப்பினர்கள் அகில இந்திய அளவில் கவுரவிக்கப்ப்ட்டு இருக்கிறார்கள். இந்த ஃபவுண்டேஷன் சார்பில் 17-வது மக்களவையில் எம்பி.க்களின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

17-வது மக்களவை தொடங்கியது முதல் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வரை அவர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றியுள்ள பணிகள் மதிப்பிடப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 40 எம்பி.க்கள் உள்ளனர். கடந்த ஜூன் 2019 முதல் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வரை 40 எம்பி.க்களின் செயல்பாடுகள் மதிப்பிடப்பட்டுள்ளன.

எப்படி மதிப்பிடப்படுகிறது?

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் தவறாமல் கலந்து கொள்வது, தங்கள் தொகுதி, மாநிலம் மற்றும் தேசியப் பிரச்சினைகளை மக்களவையில் எடுத்துக் கூறும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற விவாதங்கள், தனிநபர் மசோதா மற்றும் கேள்விகள் மூலம் ஒரு எம்.பி. வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடியும். பூஜ்ய நேரத்தில் அனைத்து எம்.பி.க்களும் தங்கள் முன் வைக்க வேண்டிய பிரச்சினைகளை எழுப்பலாம். தாங்களே முன்னெடுத்து பேசுவதை இன்ஷியேட்டட் டிபேட் (Initiated debates) என்பர். பிறர் பேசியதை வழிமொழிந்தால் அது அசோசியேட் டிபேட் (Associated Debates) என்பர். இந்த ஆய்வில் எம்.பி.க்கள் தாங்களாக முன்னெடுத்ததை மட்டுமே கணிக்கில் கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில் எம்.பி.க்களின் செயல்பாடு கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழக எம்பி.க்களில் தருமபுரி திமுக எம்பி.எஸ்.செந்தில்குமார் 386 புள்ளிகளுடன் தமிழக அளவில் முதலிடத்திலும், தேசிய அளவில் 18-வதுஇடத்திலும் உள்ளார். எம்பி. செந்தில்குமார் தொடர்ந்து முயற்சித்தால் முதலிடம் பிடித்து, ‘சன்சத் ரத்னா’ விருது பெற முடியும்.

தென்காசி திமுக எம்.பி. தனுஷ்குமார் 348 புள்ளிகளுடன் தமிழக அளவில் 2-ம் இடத்திலும், தேசிய அளவில் 31-வது இடத்திலும் உள்ளார். தமிழக அளவில் செந்தில்குமார் 322 கேள்விகளை எழுப்பி முதல் இடத்திலும், தனுஷ்குமார் 317 கேள்விகள் எழுப்பி 2-ம் இடத்திலும் உள்ளனர். இருவருமே 99% அமர்வுகளில் பங்கேற்றுள்ளனர்.

தேனி அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் 84 சுயமுயற்சி விவாதங்களில் பங்கேற்று, தமிழக அளவில் முதலிடத்தில் உள்ளார். இவர் தேசிய அளவில் ஒட்டுமொத்த மதிப்பீட்டின்படி 205 புள்ளிகள் பெற்றுள்ளார். 65 சதவீத அமர்வுகளில் பங்கேற்றுள்ளார். சிதம்பரம் தொகுதி எம்.பி. திருமாவளவன் 6 தனி நபர் மசோதாக்களை அறிமுகம் செய்து, தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

தமிழக, புதுச்சேரி எம்.பி.க்களின் செயல்பாடு
(17வது மக்களவை தொடங்கியது முதல் 2022 பட்ஜெட் கூட்டத்தொடர் வரை)

பெயர்

தொகுதி

வயது

விவாம் முன்னெடுப்பு

தனி நபர் மசோதா

கேள்வி

மொத்தம்

வருகைப்பதிவு

செந்தில்குமார்

தருமபுரி

44

61

3

322

386

99

தனுஷ் எம் குமார்

தென்காசி

46

31

0

317

348

99

கெளதம் சிகாமணி

கள்ளக்குறிச்சி

47

36

0

260

296

89

சி.என்.அண்ணாதுரை

திருவண்ணாமலை

48

37

0

258

295

72

ஜி.செல்வம்

காஞ்சிபுரம்

47

11

0

277

288

78

மாணிக்கம் தாகூர்

விருதுநகர்

46

46

0

223

269

90

திருநாவுக்கரசர்

திருச்சி

72

21

0

234

255

63

நவாஸ்கனி

ராமநாதபுரம்

42

48

3

185

236

86

தமிழச்சி தங்கப்பாண்டியன்

தென்சென்னை

59

42

4

178

224

78

கலாநிதி

வட சென்னை

52

46

1

174

221

83

செல்வராஜ்

நாகை

65

54

0

165

219

68

பார்த்திபன்

சேலம்

52

33

0

183

216

86

.ராசா

நீலகிரி

58

33

2

174

209

74

நடராஜன்

கோவை

71

42

0

164

206

82

பாரிவேந்தர்

பெரம்பலூர்

80

28

2

175

205

62

ரவீந்திரநாத் குமார்

தேனி

42

84

0

121

205

65

சின்ராஜ்

நாமக்கல்

56

10

0

186

196

70

கணேசமூர்த்தி

ஈரோடு

74

25

1

170

196

71

டி.ஆர்.பாலு

ஸ்ரீபெரும்புதூர்

80

45

0

146

191

83

விஷ்ணு பிரசாத்

ஆரணி

49

26

2

154

182

75

சு. வெங்கடேசன்

மதுரை

52

24

0

156

180

73

ரவிகுமார்

விழுப்புரம்

61

45

5

130

180

70

சண்முக சுந்தரம்

பொள்ளாச்சி

51

18

0

159

177

86

ஜெகத்ரட்சகன்

அரக்கோணம்

74

11

0

164

175

32

ஜோதிமணி

கரூர்

46

35

2

133

170

76

கதிர் ஆனந்த்

வேலூர்

47

19

2

146

167

60

கனிமொழி கருணாநிதி

தூத்துக்குடி

54

35

2

121

158

72

ஞான திரவியம்

நெல்லை

57

15

0

142

157

63

சுப்பராயன்

திருப்பூர்

74

40

0

114

154

58

எச்.வசந்தகுமார்

கன்னியாகுமரி

72

40

2

104

146

88

திருமாவளவன்

சிதம்பரம்

59

55

6

81

142

72

வேலுச்சாமி

திண்டுக்கல்

55

13

0

125

138

81

செல்லகுமார்

கிருஷ்ணகிரி

62

23

0

109

132

56

ரமேஷ்

கடலூர்

51

5

0

105

110

55

விஜய் வசந்த்

கன்னியாகுமரி

9

0

92

101

84

கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை

50

16

1

81

98

73

ராமலிங்கம்

மயிலாடுதுறை

78

11

0

81

92

64

தயாநிதி மாறன்

மத்திய சென்னை

55

17

0

71

88

79

வைத்திலிங்கம்

புதுச்சேரி

71

18

0

34

52

68

ஜெயக்குமார்

திருவள்ளூர்

72

23

0

9

32

86

பழனிமாணிக்கம்

தஞ்சாவூர்

71

3

0

0

3

40

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் வசந்த்குமார் மறைவுக்கு பிறகு நடந்த இடைத் தேர்தலில் விஜய் வசந்த் எம்.பி.யாக தேர்வானார். (தகவல்: பிஆர்எஸ் இந்தியா)

தேசிய அளவில் முதலிடம்

தேசிய அளவில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த, தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்பி. சுப்ரியா சுலே 569 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிவசேனா எம்.பி. ஷீரங் அப்பா பார்னே 501 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

விவாதங்கள்

இதுபோலவே விவாதங்களைப் பொறுத்தவரையில் மேற்குவங்க மாநில காங்கிரஸ் எம்.பி. அதிரஞ்சன் சவுத்திரி 178 விவாதங்களில் பங்கேற்று முதலிடத்தில் உள்ளார்.

தமிழகத்தை பொறுத்தவரையில் தேனி அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் 84 சுயமுயற்சி விவாதங்களில் பங்கேற்று, தமிழக அளவில் முதலிடத்தில் உள்ளார். இவர் தேசிய அளவில் ஒட்டுமொத்த மதிப்பீட்டின்படி 205 புள்ளிகள் பெற்றுள்ளார். 65 சதவீத அமர்வுகளில் பங்கேற்றுள்ளார்.

கேரளாவைச் சேரந்ந்த எம்.பி. பிரேம சந்திரன் 166 விவாதங்களில் பங்கேற்று 2-ம் இடத்தில் உள்ளார்.

தனிநபர் மசோதா

தனிநபர் மசோதவை பொறுத்தவரையில் மகாராஷ்டிர மாநில பாஜக எம்.பி. கோபால் சின்னய்ய ஷெட்டி 13 தனிநபர் மசோதாக்களை அறிமுகம் செய்து முதலிடம் பிடித்துள்ளார்.

தமிழகத்தை பொறுத்தவைரை சிதம்பரம் தொகுதி எம்.பி. வி.சி.க தலைவர் திருமாவளவன் 6 தனி நபர் மசோதாக்களை அறிமுகம் செய்து, தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளார். இவர் 142 புள்ளிகள் (விவாதங்கள் + தனிநபர் மசோதா + கேள்விகளுடன் உள்ளார். 72 சதவிகித அமர்வுகளில்
பங்கேற்றுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.