ஏசிசி, அம்புஜா சிமெண்டை கைபற்ற அதானி தீவிர முயற்சி.. நிதி திரட்டும் முயற்சியில் வெற்றி கிடைக்குமா?

இந்தியாவின் முன்னணி வணிக குழுமமான அதானி, உலகின் மிகப்பெரிய சிமெண்ட் நிறுவமமான ஹோல்சிம் கட்டுப்பாட்டில் இருக்கும் அம்புஜா சிமெண்ட், ஏசிசி சிமெண்ட் ஆகியவற்றை வாங்க திட்டமிட்டு வருகின்றது.

இந்த இரு சிமெண்ட் நிறுவனங்களையும் வாங்க சில நிதிக் குழுக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

15 நிமிடத்தில் 5 லட்சம் கோடி இழப்பு.. மும்பை பங்குச்சந்தை சரிவுக்கு 5 காரணம்!!

அம்புஜா சிமெண்ட், ஏசிசியை கையகப்படுத்த அதானி குழுமத்திற்கு 2 பில்லியன் டாலர் வரையில் நிதி உதவி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

சிமெண்ட் உற்பத்தியில் முக்கிய பங்கு

சிமெண்ட் உற்பத்தியில் முக்கிய பங்கு

அதானி குழுமத்தின் இந்த கையகப்படுத்தலானது அதன் உள்கட்டமைப்பு வணிகத்திற்கு மிக பயனுள்ளதாக இருக்கும். மேலும் இந்த கையகப்படுத்தலுக்கு பிறகு அதானி குழுமம் சிமெண்ட் உற்பத்தியிலும் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு நிறுவனமாக உருவெடுக்கும். இந்த நிறுவனங்களையும் 7.5 பில்லியன் டாலர் மதிப்பில் கையகப்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பெரிய நுகர்வோர்

பெரிய நுகர்வோர்

சர்வதேச அளவில் சீனாவுக்கு அடுத்தப்படியாக நுகர்வில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. ஆக அதானியின் இந்த கையகப்படுத்தல் அதன் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

ஏசிசி இந்தியாவின் முதல் கட்டுமான பொருட்களை உற்பத்தி செய்யும் மிகப் பழைமையான தயாரிப்பாளராக இருக்க முடியும். இது அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும், இது ஐரோப்பிய நிறுவனத்தின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.

 

பேச்சு வார்த்தை
 

பேச்சு வார்த்தை

இத்தகைய பின்புலம் கொண்ட நிறுவனங்களை வாங்க தான், அதானி போதுமான நிதி திரட்டும் திட்டத்தில் களமிறங்கியுள்ளது. இதற்காகத் தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆளும் குடும்பத்தினை சேர்ந்தவர் தான் ஷேக் தஹ்னூன் பின் சயீத் அல் நஹ்யானுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

 நிதியுதவி

நிதியுதவி

முன்னதாக அதானி குழுமத்திற்குக் கடன் உதவி வழங்க சர்வதேச வங்கிகளான பார்க்லேஸ், டாய்ச் வங்கியும், இந்திய வங்கிகளான ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கிகளும் நிதி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு வந்ததாக கூறப்பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Adani intensifies fundraising efforts to acquire ACC, Ambuja Cement

Adani intensifies fundraising efforts to acquire ACC, Ambuja Cement/ஏசிசி, அம்புஜா சிமெண்ட் கைபற்ற அதானி தீவிர முயற்சி.. நிதி திரட்டும் முயற்சியில் வெற்றி கிடைக்குமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.