நெய்வேலி அருகே கத்தியைக் காட்டி வாகன ஓட்டிகளையும், போலீசையும் மிரட்டிய ரவுடியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே வாகன ஓட்டிகளை கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி ஒருவனை, பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
நெய்வேலி அருகே, கத்திமுனையில் வாகன ஓட்டிகளை சில இளைஞர்கள் மிரட்டி கொண்டு இருந்துள்ளனர். அப்போது போலீசார் வருவதை கண்டதும், தங்களது இருசக்கர வாகனத்தில் தப்பி செல்ல முயற்சித்தனர்.
அவர்களை காவல்துறையினர் விரட்டி சென்றனர். அப்போது தண்டபாணி என்ற காவலரை அந்த இளைஞர்கள் கத்தியை காட்டி மிரட்டிய போது, பொது மக்கள் ஒன்று திரண்டனர்.
இந்த இளைஞர்களில் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் தப்பித்து செல்லவே, அப்போது தவறிக் கீழே விழுந்த அந்த இளைஞரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்.
பிடிபட்ட நபர் ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி அண்மையில் வெளியே வந்து மீண்டும் ரவுடித்தனம் செய்து வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.