அமெரிக்கா கலிபோர்னியா மாகணத்தில் கடையில் திருட வந்த கொள்ளையர்களுக்கும், ஊழியருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையின் சிசிடிவி வெளியாகி உள்ளது.
துப்பாகிகளுடன் கடையில் கொள்ளையடிக்க வந்த நான்கு பேர், வாக்குவாதம் செய்த ஊழியரை நோக்கி சுட்டனர்.
சுதாரித்து ஊழியர் நடத்திய பதில் தாக்குதலில் ஒரு கொள்ளையன் குண்டடிபட்டு உயிரிழந்தான்.
மற்றொரு கொள்ளையன் பிடிப்பட்ட நிலையில், தப்பிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சரமாரி துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவத்தின் சிசிடிவியை போலீசார் வெளியிட்டுள்ளனர்.