கள்ளதொடர்ப்பை கண்டித்த மனைவியை கொன்ற கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் குப்பிநயக்கன்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்கு ராஜாத்தி என்ற மனைவியும் ஐந்து குழந்தைகளும் உள்ளனர். இந் நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர்.
இதனை அறிந்த ராஜராஜன் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வருகின்ற வியாழக்கிழமை ராஜாத்தியின் கணவர் லட்சுமணனையும் அந்த பெண்ணையும் விசாரணைக்கு அழைத்திருந்தனர்.
இந்நிலையில், வழக்கைத் திரும்பப் பெறுமாறு ராஜாத்தியை அவரது கணவர் மிரட்டியுள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே வீட்டில் இருந்த அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் அவரது சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட மனைவியே கணவனை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.