வேலூரில், கூலித் தொழிலாளியின் வீட்டிற்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மின்கட்டணம் வந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
டோபி கானா பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் கூலிதொழிலாளி ராணி அம்மாள். இவரது வீட்டில் 3 பேர் மட்டுமே வசித்து வரும் நிலையில், வழக்கமாக 300 ரூபாய் வரை மட்டுமே மின்கட்டணம் வரும் என்று கூறப்படுகிறது.
இம்மாத கட்டணம் 1.60 லட்சம் ரூபாய் வந்ததால் அதிர்ச்சி அடைந்த ராணி அம்மாள், மின்வாரிய அலுவலகத்தில் புகாரளித்தார். இதையடுத்து புதிய மீட்டரை பொறுத்திய மின்வாரிய ஊழியர்கள், பழைய மீட்டரை ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.