சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதற்கு மத்தியில் அங்கு வரும் செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த ஆசிய விளையாட்டு போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஹாங்சூ நகரில் செப்டம்பர் 10-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ள ஆசிய ஒலிம்பிக் கவுன்சில், போட்டி நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஹாங்சூ நகர் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் ஷாங்காய் நகர் அருகே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.