நாடாளுமன்றத்தில் விரைவில் நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரின் அறைக்கு சென்றுள்ளனர்.
அங்கு சபாநாயகரை சந்தித்து நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும் சபாநாயகர் கோரிக்கையை நிராகரித்ததை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கத்தி பெரும் கூச்சலிட்டு அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதேவேளை, நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.