சர்வதேச சந்தையில் சரிந்த தங்கம் விலை இந்தியாவில் மட்டும் உயர்வு.. ஏன் தெரியுமா..?

முதலீட்டு சந்தை அனைத்தும் தலைகீழாக மாறியுள்ள நிலையில் தங்கம் மீது முதலீடு செய்வது என்பது இரு வேறு முடிவுகளில் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் இந்திய சந்தையில் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

தங்கம் முதலீட்டில் இப்படி இக்கட்டான சூழ்நிலை உருவாக என்ன காரணம்.. எதனால் தங்கம் விலை சர்வதேச சந்தையில் சரிகிறது..? இந்தியாவில் ஏன் உயர்கிறது..?

பெரும் ஏமாற்றம்.. எகிறி வரும் தங்கம் விலை.. இனி குறையவே குறையாதா..!

இங்கிலாந்து பொருளாதாரம்

இங்கிலாந்து பொருளாதாரம்

வியாழக்கிழமை இங்கிலாந்து பொருளாதாரம் 2023 இல் சுருங்கக்கூடும் கணித்து வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகளால் உயர்த்தியது. இதோடு 2022ஆம் ஆண்டில் பிரிட்டன் நாட்டின் பணவீக்கம் 10 சதவீதத்திற்கும் மேலாக இருக்கும் எனப் பேங்க் ஆப் இங்கிலாந்து கணித்துள்ளது.

அமெரிக்க மத்திய வங்கி

அமெரிக்க மத்திய வங்கி

புதன்கிழமை அமெரிக்க மத்திய வங்கி தனது நாணய கொள்கையில் 50 அடிப்படை புள்ளிகளால் அதிகரித்துள்ளது. இது 22 ஆண்டுகளில் மிகப்பெரிய உயர்வாகும். இந்தியாவும் அன்னிய முதலீடு வெளியேற்றத்தைத் தடுக்க ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது.

அமெரிக்க வேலைவாய்ப்புத் தரவு
 

அமெரிக்க வேலைவாய்ப்புத் தரவு

இதேவேளையில் அமெரிக்காவின் வேலைவாய்ப்புச் சந்தையில் ஏப்ரல் மாதம் 3,91,000 வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதற்கு முன்பு 4,31,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கியது. இதன் மூலம் வேலைவாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிகரித்துள்ளது.

 முதலீட்டு சந்தை

முதலீட்டு சந்தை

பிரிட்டன் பணவீக்க கணிப்புகள், அமெரிக்காவின் வேலைவாய்ப்புகள் தரவு தங்கம் முதலீட்டுச் சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தின் அடிப்படையே சரியாக இல்லாத நிலையில் தங்கம் மீது முதலீடு செய்வோர் எண்ணிக்கை சர்வதேச சந்தையில் சரிந்துள்ளது.

சர்வதேச சந்தை விலை

சர்வதேச சந்தை விலை

இதன் எதிரொலியாகச் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை இன்று 1868 டாலர் வரையில் சரிந்தது. ஆனால் பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவை சமாளிக்க முதலீட்டாளர்கள் கணிசமாக முதலீடு செய்தனர் இதனால் தங்கம் விலை மாலை வர்த்தகத்தில் 1878 டாலர் வரையில் உயர்ந்தது.

எம்சிஎக்ஸ் சந்தை

எம்சிஎக்ஸ் சந்தை

இதேபோல் எம்சிஎக்ஸ் சந்தையில் ஜூலை மாதத்திற்கான ஆர்டர்களில் 10 கிராம் தங்கம் விலை 0.81 சதவீதம் அதிகரித்து 51,313 ரூபாயாகவும், 1 கிலோ வெள்ளி விலை 0.42 சதவீதம் அதிகரித்து 62,600 ரூபாயாக உள்ளது.

இந்தியா

இந்தியா

சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்த நிலையில் இந்தியாவில் மட்டும் தங்கம் விலை உயர முக்கியக் காரணம், இந்தியாவில் தற்போதும் திருமணச் சீசன் என்பதால் ரீடைல் சந்தையில் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது. இதனாலேயே தங்கம் விலை இந்தியாவில் அதிகரித்துள்ளது.

22 கேரட் தங்கம் விலை

22 கேரட் தங்கம் விலை

சென்னை – 48,410 ரூபாய்
மும்பை – 47,100 ரூபாய்
டெல்லி – 47,100 ரூபாய்
கொல்கத்தா – 47,100 ரூபாய்
பெங்களூர் – 47,100 ரூபாய்
ஹைதராபாத் – 47,100 ரூபாய்
கேரளா – 47,100 ரூபாய்
புனே – 47,190 ரூபாய்
பரோடா – 47,190 ரூபாய்
அகமதாபாத் – 47,170 ரூபாய்
ஜெய்ப்பூர் – 47,250 ரூபாய்
லக்னோ – 47,250 ரூபாய்
கோயம்புத்தூர் – 48,410 ரூபாய்
மதுரை – 48,410 ரூபாய்
விஜயவாடா – 47,100 ரூபாய்
பாட்னா – 47,190 ரூபாய்
நாக்பூர் – 47,190 ரூபாய்
சண்டிகர் – 47,250 ரூபாய்
சூரத் – 47,170 ரூபாய்
புவனேஸ்வர் – 47,100 ரூபாய்
மங்களுரூ – 47,100 ரூபாய்
விசாகபட்டினம் – 47,100 ரூபாய்
நாசிக் – 47,190 ரூபாய்
மைசூர் – 47,100 ரூபாய்

24 கேரட் தங்கம் விலை

24 கேரட் தங்கம் விலை

சென்னை – 52,810 ரூபாய்
மும்பை – 51,380 ரூபாய்
டெல்லி – 51,380 ரூபாய்
கொல்கத்தா – 51,380 ரூபாய்
பெங்களூர் – 51,380 ரூபாய்
ஹைதராபாத் – 51,380 ரூபாய்
கேரளா – 51,380 ரூபாய்
புனே – 51,470 ரூபாய்
பரோடா – 51,470 ரூபாய்
அகமதாபாத் – 51,390 ரூபாய்
ஜெய்ப்பூர் – 51,530 ரூபாய்
லக்னோ – 51,530 ரூபாய்
கோயம்புத்தூர் – 52,810 ரூபாய்
மதுரை – 52,810 ரூபாய்
விஜயவாடா – 51,380 ரூபாய்
பாட்னா – 51,470 ரூபாய்
நாக்பூர் – 51,470 ரூபாய்
சண்டிகர் – 51,530 ரூபாய்
சூரத் – 51,390 ரூபாய்
புவனேஸ்வர் – 51,380 ரூபாய்
மங்களுரூ – 51,380 ரூபாய்
விசாகபட்டினம் – 51,380 ரூபாய்
நாசிக் – 51,470 ரூபாய்
மைசூர் – 51,380 ரூபாய்

1 கிலோ வெள்ளி விலை

1 கிலோ வெள்ளி விலை

சென்னை – 66500.00 ரூபாய்
மும்பை – 62300.00 ரூபாய்
டெல்லி – 62300.00 ரூபாய்
கொல்கத்தா – 62300.00 ரூபாய்
பெங்களூர் – 66500.00 ரூபாய்
ஹைதராபாத் – 66500.00 ரூபாய்
கேரளா – 66500.00 ரூபாய்
புனே – 62300.00 ரூபாய்
பரோடா – 62300.00 ரூபாய்
அகமதாபாத் – 62300.00 ரூபாய்
ஜெய்ப்பூர் – 62300.00 ரூபாய்
லக்னோ – 62300.00 ரூபாய்
கோயம்புத்தூர் – 66500.00 ரூபாய்
மதுரை – 66500.00 ரூபாய்
விஜயவாடா – 66500.00 ரூபாய்
பாட்னா – 62300.00 ரூபாய்
நாக்பூர் – 62300.00 ரூபாய்
சண்டிகர் – 62300.00 ரூபாய்
சூரத் – 62300.00 ரூபாய்
புவனேஸ்வர் – 62300.00 ரூபாய்
மங்களுரூ – 66500.00 ரூபாய்
விசாகபட்டினம் – 66500.00 ரூபாய்
நாசிக் – 62300.00 ரூபாய்
மைசூர் – 66500.00 ரூபாய்

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Gold price on friday: Check chennai, coimbatore, madurai gold price for weekend buying

Gold price on Friday: Check chennai, coimbatore, madurai gold price for weekend buying சர்வதேச சந்தையில் சரிந்த தங்கம் விலை இந்தியாவில் மட்டும் உயர்வு.. ஏன் தெரியுமா..?

Story first published: Friday, May 6, 2022, 20:45 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.