சாகர்மாலா திட்ட நிதி 6.5 லட்சம் கோடியாக அதிகரிப்பு..!

சாகர்மாலா திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை 5.5 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 6.5 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்துவதாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய சாகர்மாலா தலைமை குழு முடிவுசெய்துள்ளது.

இப்போது சாகர்மாலா திட்டத்தின் கீழ் 5.5 லட்சம் கோடி ரூபாய்க்கு 802 பணிகள் நடைபெற்று வந்தன. புதிதாகக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால் பணிகளின் எண்ணிக்கை 1,537 ஆக உயர்ந்துள்ளது. 2035-ம் ஆண்டுக்குள் இந்த பணிகளை நிறைவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

டாடா பவரின் சூப்பரான அறிவிப்பு.. Q4ல் ரூ.503 கோடி லாபம்.. முதலீட்டாளர்கள் ஹேப்பி..!

சாகர்மாலா திட்டம்

சாகர்மாலா திட்டம்

இந்தியத் துறைமுகங்கள் மற்றும் அவற்றுக்கான போக்குவரத்தைச் சர்வதேச தரத்திற்கு உயர்த்தி அமைப்பதே சாகர்மாலா திட்டத்தின் நோக்கம். இந்த திட்டத்தினால் நாட்டின் கடற்கரை பகுதிகளில் தொழில் மற்றும் போக்குவரத்து வசதிகள் மேம்படும்.

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

சாகர்மாலா திட்டப் பணிகள் தொடங்கியதிலிருந்து இதுவரையில் 99,281 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் முடிவடைந்துள்ளன. 45,000 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் அரசு, தனியார் கூட்டணியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. 51 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2.12 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 200 பணிகளுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த இரண்டு வருடத்தில் இவை முடிந்துவிடும்.

துறைமுகங்களின் டிராப்பிக் அதிகரிப்பு
 

துறைமுகங்களின் டிராப்பிக் அதிகரிப்பு

சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது இந்தியாவின் முக்கிய துறைமுகங்களின் டிராபிக் 6.94 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிலும் தமிழ்நாட்டின் குளச்சல், கேரளாவின் விழிஞம், மகாராஷ்டிராவின் வாத்வான், கர்நாடகாவின் தடடி, ஆந்திரப் பிரதேசத்தின் மசிபிப்பட்டினம், மேற்கு வங்கத்தின் சாகர் தீவு துறைமுகங்களின் டிராபிக் பெரும் அளவில் அதிகரித்துள்ளது.

காத்திருப்பு நேரம் குறைப்பு

காத்திருப்பு நேரம் குறைப்பு

2014-2015 நிதியாண்டில் துறைமுகங்களிலிருந்து சரக்கை வெளியில் அனுப்பும் காத்திருப்பு நேரம் 96 மணி நேரமாக இருந்தது. அது இப்போது 35 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது என கப்பல் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தெரிவித்துள்ளார். எனவே துறைமுகங்களில் இன்னும் அதிகமான டெர்மினிலஙள் மற்றும் சரக்கு இறக்குமதி பெர்த்துக்களை அமைக்கும் போது இந்த காத்திருப்பு நேரம் இன்னும் குறையும் என கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Sagarmala programme enhanced to Rs 6.5 lakh crore

Sagarmala programme enhanced to Rs 6.5 lakh crore | சாகர்மாலா திட்ட நிதி 6.5 லட்சம் கோடியாக அதிகரிப்பு..!

Story first published: Friday, May 6, 2022, 22:34 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.