சுவிட்சலாந்தில் தனியார் காஃபி தொழிற்சாலைக்கு டெலிவரி செய்யப்பட்ட காஃபி கொட்டைகள் அடங்கிய கண்டெய்னர்களில் இருந்து 500 கிலோ அளவிலான கொகைன் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஃபிரிபோர்க் நகரில் உள்ள பிரபலமான அந்த தொழிற்சாலைக்கு வந்த கண்டெய்னர்களில் மர்ம வெள்ளை பவுடர் அடங்கிய பொட்டலங்கள் இருப்பதாக ஊழியர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, அந்த மர்ம பவுடர் கொகைன் போதைப்பொருள் என்பதை உறுதி செய்த அதிகாரிகள் மொத்தம் சுமார் 389 கோடி மதிப்பிலான மதிப்பிலான கொகைன் போதைப்பொளை கைப்பற்றினர்.
பிரேசிலில் இருந்து கண்டெய்னர்கள் வந்திருப்பதை உறுதி செய்துள்ள அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.