சுவிஸில் இருந்து பிரித்தானியாவுக்கு பாய்மர விமானத்தில் பறந்து சாகசம் செய்த விமானி!


ஆச்சரியமூட்டும் வகையில் சுவிட்சர்லாந்து இருந்து கிளைடர் விமானம் மூலம் பிரித்தானியாவுக்கு பறந்து சென்று விமானி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் Biel நகரத்தைச் சேர்ந்த Yves Gerster எனும் விமானி இந்த ஆச்சரியம் அளிக்கும் சாதனையை செய்துள்ளார்.

Sailplane (பாய்மர விமானம்) என்பது கிளைடிங் விளையாட்டில் பயன்படுத்தப்படும் ஒரு வகை Glider விமானம் ஆகும். என்ஜின் போன்று எந்தவித ஆற்றலும் இல்லாத அந்த விமானம் உயரத்தை அடைய வளிமண்டலத்தில் இயற்கையான காற்றோட்டத்தைப் பயன்படுத்தி பறக்கக்கூடியது.

புதன்கிழமை காலை கோர்ட்டலரியில் இருந்து தனது கிளைடருடன் புறப்பட்டு 9 மணி நேரம் கழித்து இங்கிலாந்தின் லாஷாமில் தரையிறங்கினார். 

31 வயதான Yves Gerster, சுவிட்சர்லாந்து தேசிய அணியின் உறுப்பினரும் ஆவார். சுவிட்சர்லாந்தில் இருந்து இங்கிலாந்து வரை கிளைடர் மூலம் பயணித்த முதல் நபர் இவர் தான். அவர் கிட்டத்தட்ட 10 மணிநேரம், 516 கிலோமீற்றர் பறந்துள்ளார்.

Gallery

Gallery

Gallery

Gallery



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.