சென்னை: சர்வதேச அளவில் முக்கிய மருந்துத் தயாரிப்பு நிறுவனமான பைசர், கரோன தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபடும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும்.
இந்நிறுவனம் உலகளவில் 11 ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையங்களைக் கொண்டிருக்கிறது. 12-வது ஆய்வு மையத்தை சென்னை ஐஐடி ஆய்வுப் பூங்காவில் அமைக்கிறது. ஆசியாவில் பைசர் அமைக்கும் முதல் ஆய்வு மையம் இதுவாகும்.
இந்த மேம்பாட்டு மையம் ரூ.150 கோடி செலவில், 61 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 250 அறிவியலாளர்கள், வல்லுநர்கள் பணியாற்றுவார்கள். சர்வதேச விற்பனை, புதிய மருந்து உருவாக்கத்துக்கு இந்த மையம் பங்களிப்பை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.