வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-தொழிலதிபர் சேகர் ரெட்டியிடம் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்து, அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தொழிலதிபர் சேகர் ரெட்டி தமிழகம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ரியல் எஸ்டேட் உட்பட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார்.கடந்த 2016ல், வருமான வரித் துறையினர் சேகர் ரெட்டி மற்றும் அவரது உறவினர் வீடுகளில் சோதனை நடத்தி, 147 கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் மற்றும் புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் 178 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
மத்திய அரசு பண மதிப்பிழப்பை அறிவித்த அடுத்த சில நாட்களிலேயே, சேகர் ரெட்டியிடம் 34 கோடி ரூபாய் மதிப்பில், புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, சேகர் ரெட்டி மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது.இந்த வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்நிலையில், அமலாக்கத் துறை விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி, சேகர் ரெட்டி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. இதையடுத்து, சேகர் ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘இந்த வழக்கில் சேகர் ரெட்டி நிரபராதி’ என கூறி, அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை தள்ளுபடி செய்தது.
Advertisement