தங்கம் விலை சரிவா.. எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா?

சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், பணவீக்கம் என்பது பெரும் சவாலான விஷயமாக உருவெடுத்துள்ளது.

இதனை கட்டுபடுத்த மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தினை அதிகரிக்க ஆரம்பித்துள்ளன.

குறிப்பாக உலகின் முன்னணி பொருளாதார நாடான அமெரிக்காவில் வட்டி விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது.

பெரும் ஏமாற்றம்.. எகிறி வரும் தங்கம் விலை.. இனி குறையவே குறையாதா..!

தங்கம் விலையினை ஊக்குவிக்கலாம்

தங்கம் விலையினை ஊக்குவிக்கலாம்

இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம். இது அடுத்து வரவிருக்கும் சில மாதங்களில் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம். எப்படியிருப்பினும் சர்வதேச அளவில் நிலவி வரும் நெருக்கடியான நிலைகள் தங்கம் விலையினை பெரியளவில் சரியாமல் தடுக்கலாம். மேலும் குறைந்த தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் வாங்க ஊக்குவிக்கலாம்.

ரிஸ்கான நிதிச் சந்தைகள்

ரிஸ்கான நிதிச் சந்தைகள்

பல்வேறு சவாலான காரணிகளுக்கு மத்தியில் நிதிச் சந்தைகள் ரிஸ்கான ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையினை ஊக்குவிக்கலாம். இது தங்கம் விலை நீண்டகால நோக்கில் அதிகரிக்க காரணமாக அமையலாம்.

 விலைவாசி தான் காரணம்
 

விலைவாசி தான் காரணம்

தொடர்ந்து மிக வேகமாக அதிகரித்து வரும் விலைவாசியின் மத்தியில் ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. இது வரவிருக்கும் கூட்டத்திலும் 75 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்க வழிவகுக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது. இதுவும் தங்கம் விலையில் எதிரொலிக்க தொடங்கலாம்.

 ஏப்ரல் நிலவரம்

ஏப்ரல் நிலவரம்

நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு தங்கம் விலையானது கடந்த ஏப்ரல் மாதத்தில் 1890 – 1990 டாலர்களுக்கு இடையில் வர்த்தகமானது. இது மே 3 – 4 அன்று நடந்த கூட்டத்தில் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டிருந்தாலும் விலையானது 1915 என்ற லெவலில் முடிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

டெக்னிக்கல் பேட்டர்ன்

டெக்னிக்கல் பேட்டர்ன்

டெக்னிக்கலாக தங்கம் விலையானது சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. இதே 5 மணி நேர கேண்டில் பேட்டர்னிலும் தங்கம் விலை குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

காமெக்ஸ் சந்தையில் தங்கம் விலை

காமெக்ஸ் சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது சற்று குறைந்து, 1874.50 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைத்துள்ளது. தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

காமெக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் சற்று குறைந்தே காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 0.34% குறைந்து, 22.365 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைத்துள்ளது. இது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 69 ரூபாய் அதிகரித்து, 50,968 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. தங்கம் விலையானது மீடியம் டெர்மில் தடுமாற்றத்தில் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலையும் குறைந்தே காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 23 ரூபாய் குறைந்து, 62,313 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று கேப் டவுன் ஆகி சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாக காணப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்று சற்றே குறைந்தே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, 4,841 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, 38,728 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் குறைந்தே காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 11 ரூபாய் குறைந்து, 5281 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 88 ரூபாய் குறைந்து, 42,248 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 52,810 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலை இன்று மாற்றமின்றி காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 67 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 670 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 67,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் விலையானது நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும், இன்று சற்று சரிவில் காணப்படுகின்றது. இது மீடியம் டெர்மில் இன்னும் சற்று குறையலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதே ஆபரண தங்கத்தினை பொறுத்தவரையில் நீண்டகால நோக்கில் தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price on may 6th 2022: gold jewellery prices down after jump

gold price on may 6th 2022: gold jewellery prices down after jump/தங்கம் விலை சரிவா .. எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.