தமிழகத்தில் மேக வெடிப்புக்கான வாய்ப்பா?: என்ன சொன்னார் வானிலை ஆய்வு மையத் தலைவர்

மே மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலையின் சராசரி இயல்பை விட குறைவாக பதிவாக வாய்ப்பு உள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் புதிய தலைமுறைக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் இதனைக் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், புதிய தலைமுறையிடம் இவ்வாறு தெரிவித்தார்.மே மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட குறைவாக பதிவாக வாய்ப்பு உள்ளதாகவும், சில நேரங்களில் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மே மாதத்தில் வெப்பநிலை குறையும்... தமிழகத்தில் வெப்ப அலை வீசாது...  பாலச்சந்திரன் கணிப்பு | Temperatures will drop in May No heat wave in Tamil  Nadu says Met office Balachandran ...
தெற்கு அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த பகுதி, 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாறி 8-ஆம் தேதி புயலாக வலுப்பெறும் எனவும், அது வடமேற்கு திசையில் மத்திய மேற்கு வங்க கடலை நோக்கி நகர்ந்து செல்லக்கூடும் எனவும், இதனால் தமிழகத்தில் மேற்கு, வடமேற்கு பகுதியில் காற்று வீசக்கூடும் எனவும, அப்போது ஈரப்பதம் குறைந்து வெப்பம் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
தெலங்கானாவைபோல, தமிழகத்தில் மேக வெடிப்புக்கான வாய்ப்பு இல்லை எனவும் அவர் தெரிவித்தார். அதே நேரத்தில் கோடையில் இருந்து தற்காத்து கொள்ள பொதுமக்கள் நீர்ச்சத்து குறையாமல் பார்த்து கொள்ளவும் அவர் அறிவுறுத்தினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.