சென்னை: 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை வரும் மே 14-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரை கோடை விடுமுறை என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருவதாகவும், பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை விடுவது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்புகளுக்கு வரும் மே 14-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரை கோடை விடுமுறை என்று அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வும், இன்று (மே 6) முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வும் தொடங்கி நடந்து வருகிறது. இந்தத் தேர்வுகள் வரும் மே 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை கோடை விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும், அந்த அறிவிப்பில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 23-ம் தேதியன்று வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.