தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 34, செங்கல்பட்டில் 16, காஞ்சிபுரத்தில் 3, திருவள்ளூர் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.
கோவை, நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், திருநெல்வேலி, திருப்பூர், திருச்சி ஆகிய 7 மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
தவிர, கர்நாடக மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து வந்த தலா ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று மொத்தம் 17,682 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 26 ஆண்கள் 38 பெண்கள் என மொத்தம் 64 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
56 பேர் இன்று குணமடைந்த நிலையில் 474 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.