தருமபுரம் ஆதீனம் விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சரியான விளக்கம் அளித்து இருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 29ஆம் ஆண்டு தொடக்க விழா எழும்பூர் தாயகம் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, தலைமை கழகச் செயலாளர் துரை வையாபுரி ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் மற்றும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மதிமுக கொடியை வைகோ ஏற்றினர் வைத்தார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்… தருமபுர ஆதீனம் விவகாரத்தில் தமிழக முதல்வர் சரியாக கூறி உள்ளார். நாங்கள் மதத்தை வைத்து அரசியல் செய்யவில்லை. அறிஞர் அண்ணாவின் வழியில் தான் நாங்கள் செல்கிறோம். ஒன்றே குலம் ஒருவனே தேவன் தான் எங்கள் கொள்கை.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தருமபுரி ஆதீனம் விவகாரத்தில் பல்லக்கு தூக்குவேன் என்று தெரிவித்ததற்கு வைகோ நகைச்சுவையாக, அண்ணாமலை தினமும் எதையாவது தூக்கிக் கொண்டுதான் இருக்கிறார் என்று தெரிவித்தார். இந்தனை ஆண்டுகள் மதிமுக பல நெருக்கடிகளையும், சோதனைகளை கடந்து தொண்டர்கள் இயக்கமாக பணிகளை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM