Summer Food Tips in tamil: நாளுக்கு நாள், கோடை கால வெப்பம் தாங்க முடியாததாக மாறி வருகிறது. தமிழகத்தின் சில மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவு சதமடித்து வருகின்றன. பல பகுதிகள் கடுமையான வெப்பத்தை எதிர்த்துப் போராடுகின்றன. இந்த சுட்டெரிக்கும் வெப்பம் நீரிழப்புக்கு வழிவகுக்கிறது. எனவே இந்த நாட்களில் ஒருவருக்கு மருத்துவ பராமரிப்பு அவசியமாக தேவைப்படுகிறது. ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் வெப்பத்தைத் தணிக்க உதவும் சில பரிந்துரைகளை சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பதிவு வாயிலாக வழங்கியுள்ளார்.
அந்த பதிவில், எப்போதும் ஏர் கண்டிஷனரை ஆன் செய்யாமல், நம் உடலின் வெப்பநிலையைக் குறைக்கப் பயன்படுத்தக்கூடிய மூன்று பருவகால மற்றும் பாரம்பரிய உணவுகளை அவர் பகிர்ந்துள்ளார். அவற்றை இப்போது பின்வருமாறு நாம் பார்க்கலாம்.
ருஜுதா திவேகர் பரிந்துரைதுள்ள சம்மர் டிப்ஸ்:
1) காலையில் ஒரு பழத்தை சாப்பிடுங்கள்
பழங்கள் சுவை நிறைந்தவை. அவை ஆக்ஸிஜனேற்றத்தின் சிறந்த மூலமாகவும் உள்ளன. நீங்கள் உட்கொள்ளும் பழங்கள் கடிக்கும்போது சாறு தருபவவையாக இருத்தல் வேண்டும்.
2) மதிய உணவிற்கு தயிர் சாதம் மற்றும் ஊறுகாய் அல்லது அப்பளத்துடன் சாப்பிடுங்கள்
தயிர் சாதம் ஒரு நல்ல ப்ரீபயாடிக், புரோபயாடிக் மற்றும் போஸ்ட்பயாடிக் உணவு. இதை மதிய உணவாகச் சாப்பிட்டால், பசியைத் திரும்பப் பெறுவதோடு, நீங்கள் நன்றாக உணருவீர்கள். கோடை மாதங்களில் நீங்கள் தோராயமாக பெறும் உப்பு அல்லது சர்க்கரை பசியையும் இது கட்டுப்படுத்தும்.
3) தூங்கும் போது குல்கந்து தண்ணீர்
இது கண் சோர்வைக் குறைத்து நன்றாக தூங்க உதவும். இது உங்கள் கால்களில் ஏற்படும் பிடிப்புகள் மற்றும் வலியையும் குறைக்கும். ஒரு டீஸ்பூன் குல்கந்த் – உலர்ந்த ரோஜா இதழ்கள் மற்றும் சர்க்கரை – ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து படுக்கைக்குச் செல்லும் முன் குடிக்கவும்.
வெப்பநிலை உயர்வின் நேரடி விளைவாக ஏற்படக்கூடிய சில உடல்நலப் பிரச்சனைகளையும் ருஜுதா திவேகர் அவரது பதிவில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
1) அசிடிட்டி:
கோடை காலத்தில் ஏற்படும் பொதுவான உடல்நலப் பிரச்சனைகளில் அமிலத்தன்மையும் ஒன்றாகும். உடலில் அதிக வெப்பம் அதிக அளவு அமிலம் உற்பத்திக்கு வழிவகுக்கும் போது இது அனுபவிக்கப்படுகிறது. நெஞ்செரிச்சல், வாய் துர்நாற்றம், புளிப்பு நாக்கு போன்றவை அமிலத்தன்மையின் அறிகுறிகள்.
2) வயிற்று உப்புசம்:
மற்ற பருவங்களை விட கோடையில் இது மிகவும் மோசமாக இருக்கும். வெப்பம் இரத்த நாளங்கள் மற்றும் நுண்குழாய்களை விரிவடையச் செய்யும் என்பதால் இது மோசமடைகிறது.
3) தலைவலி:
நீரிழப்பு, சுற்றுச்சூழல் மாசுபாடு, வெப்ப சோர்வு மற்றும் வெப்ப பக்கவாதம் போன்ற காரணங்களால் கோடை மாதங்களில் தலைவலியின் அதிர்வெண் அதிகரிக்கலாம்.
4) சோர்வு:
இது கோடை காலத்தில் நீரிழப்புக்கான பொதுவான அறிகுறியாகும்.
5) அஜீரணம்:
வெப்பநிலை அதிகரிப்பு செரிமான அமைப்பை பலவீனப்படுத்துகிறது, இது அஜீரணத்திற்கு வழிவகுக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“