தேனி: நில மோசடி வழக்கு – துணை வட்டாட்சியர் உட்பட 3 பேர் கைது

தேனி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிலம் தனியாருக்கு சட்ட விரோதமாக பட்டா மாற்றம் செய்யபட்ட வழக்கில் துணை வட்டாட்சியர், நில அளவையர் உள்பட 3 பேரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியில் தாமரைகுளம், ஜெயமங்கலம், வடவீரநாயக்கன்பட்டி ஆகிய பகுதியில் உள்ள 182 ஏக்கர் அரசு நிலத்தை தனியாருக்கு அரசு அதிகாரிகளின் உதவியுடன் பட்டா மாறுதல் செய்யபட்டதாக குற்றசாட்டு எழுந்தது. இது தொடர்பாக அப்போது பணியில் இருந்த இரண்டு வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர்கள் உட்பட 14 பேர் மீது குற்றபிரிவு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யபட்டு பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றபட்டது.
image
இந்த நிலையில் சிபிசிஐடி காவல்துறையினர் முன்பு வட்டாட்சியர்கள் மற்றும் இந்த வழக்கு தொடர்புடைய பலரும் ஆஜராகி விசாரனை நடத்தபட்டு வந்தது, பலர் கைது செய்யபட்டு, சிறையில் அடைக்கபட்டனர். இந்நிலையில் சிபிசிஐடி விசாரனைக்கு ஆஜராகுமாறு அழைக்கபட்ட பெரியகுளம் பகுதி மண்டல துணை வட்டாட்சியர் மோகன்ராம், நில அளவையர் சக்திவேல் மற்றுக் சக்திவேலுக்கு உதவியாக இருந்த செல்வராஜ் ஆகியோரிடம் சிபிசிஐடி டி,எஸ்,பி சரவனன் விசாரனை நடத்தினார்.
image
அந்த விசாரணையின் முடிவில் அவர்கள் 3 பேரையும் சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து கைது செய்யபட்டவர்கள் தேனி மாவட்ட நிதிமன்றத்தில் நிதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் தேனி அருகே உள்ள தேக்கம்பட்டி சிறையில் அடைக்கபட்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.