தேர்தல் முடிவுகள் கடுமையான இரவை ஏற்படுத்தியுள்ளது: போரிஸ் ஜான்சன் பேட்டி!


பிரித்தானியாவின் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் Conservatives கட்சிக்கு மிகவும் கடுமையான இரவை ஏற்படுத்தி இருப்பதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் பெருநகர சபைகளுக்கான உறுப்பினர்கள் தேர்தல் மற்றும் வேல்ஸ், ஸ்காட்லாந்து ஆகியவற்றில் உள்ள உள்ளூர் அதிகாரிகளை தேர்வு செய்வது தொடர்பான தேர்தல் ஆகியவை நேற்று நடைப்பெற்ற முடிந்த நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை மே 6ம் திகதியான இன்று நடைப்பெற்று வருகிறது.

இதில், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் Conservatives கட்சி பல இடங்களில் தோல்வியை தழுவி பெரும் பின்னடைவை அடைந்துள்ளது. இவற்றில் 1964ல் இருந்து Conservatives கட்சியின் ஆட்சி அதிகாரத்தில் இருந்த Westminster-யும் Labour கட்சியிடம் Tories இழந்துள்ளனர்.

மேலும் Wandsworth பகுதியை 1978 பிறகு கைப்பற்றியுள்ள Labour கட்சி, Barnet பகுதியையும் முதல்முறையாக வெற்றிபெற்றுள்ளது.

இந்தநிலையில், லண்டனில் உள்ள பள்ளி வளாகம் ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், Conservatives கட்சியின் Tories வேட்பாளர்கள் இந்த உள்ளாட்சி தேர்தலில் கலவையான முடிவுகளை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

 இந்த உள்ளாட்சி தேர்தல் Conservatives கட்சி உறுப்பினர்களுக்கு பல பகுதிகளில் கடுமையான இரவை ஏற்படுத்தி இருப்பதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

கூடுதல் செய்திகளுக்கு: பெரும் பின்னடைவில் போரிஸ் ஜான்சனின் Conservatives கட்சி: பரபரப்பூட்டும் பிரித்தானிய தேர்தல் முடிவுகள்!

மேலும் இந்த தேர்தல் முடிவுகள் எங்களுக்கு மிகப்பெரிய பாடம் என்றும், அடுத்து நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று பொதுமக்களிடம் இருந்து வந்து இருக்கும் செய்தியாக கருதுவதாகவும் தெரிவித்த போரிஸ் ஜான்சன், அவர்களுக்கான முக்கியமான பெரிய பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் தெரிவித்துள்ளார்.   



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.