அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் காக்னிசென்ட் நிறுவனத்தின் முதல் காலாண்டின் வருவாய் பிளாட்டாக உள்ளதாக அறிவித்துள்ளது.
ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் காக்னிசென்ட் நிறுவனம் 4.8 பில்லியன் டாலர் வருவாய் பெற்றுள்ளது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது 10.9 சதவீத வருவாய் அதிகரித்துள்ளது. டிஜிட்டல் வணிக வருவாய் 20 சதவீதம் உயர்ந்துள்ளது.
ரஷ்யாவுக்கு அடுத்த செக்.. ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிரடி முடிவு.. உலக நாடுகள் கவலை..!
போட்டி நிறுவனங்கள்
இதே காலாண்டில் போட்டி நிறுவனங்களான டிசிஎஸ் 14.3 சதவீத வருவாய் வளர்ச்சியும், இன்போசிஸ் 21 சதவீத வருவாய் வளர்ச்சியும் பதிவுசெய்துள்ளன.
லாபம்
சென்ற ஆண்டு முதல் காலாண்டில் 505 மில்லியன் டாலர்களாக இருந்த காக்னிசென்ட் வருவாய், இந்த ஆண்டு 563 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது. ஆனால் அக்டோபர் – டிசம்பர் மாதம் வரையிலான காலாண்டுடன் ஒப்பிடும் போது லாபம் சரிந்துள்ளது.
ஊழியர்களுக்கு நன்றி
போட்டி நிறைந்த இந்த தொழிலாளர் சந்தையில், முதல் காலாண்டு பொறுப்புகளைச் சிறப்பாகச் செய்துள்ளோம். திறமையான நமது ஊழியர்களுக்கு நன்றி என காக்னிசென்ட் தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் ஹம்ப்ரிஸ் கூறியுள்ளார்.
ஊழியர்கள் எண்ணிக்கை
காக்னிசென்ட் நிறுவனத்தில் மொத்தம் 3 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமாக ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அதில் பெரும் பகுதியினர் சென்னையிலிருந்து பணிபுரிந்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஊழியர்கள் வெளியேற்ற எண்ணிக்கை
அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் காக்னிசென்ட் நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்றம் 31 சதவீதமாக இருந்தது. அதை ஜனவரி – மார்ச் காலாண்டில் 26 சதவீதமாகக் குறைத்துள்ளனர். மேலும் புதிதாக 9,800 ஊழியர்கள் காக்னிசென்ட் நிறுவனம் பணிக்கும் எடுத்துள்ளது. சென்ற ஆண்டு முதல் காலாண்டில் காக்னிசென்ட் நிறுவன ஊழியர்கள் வெளியேற்ற எண்ணிக்கை 18 சதவீதமாக இருந்தது. ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்ற எண்ணிக்கை 10 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால் தான் அது ஊழியர்கள் பணிபுரிய ஏற்ற நிறுவனம் எனவும், கிடைக்கும் பணிகளைச் சிறப்பாக நிறுவனத்தால் செயல்படுத்த முடியும் என கருதப்படுகிறது.
துறைவாரியான வணிக வளர்ச்சி
காக்னிசென்ட் நிறுவன டிஜிட்டல் வணிக வருவாய் 20 சதவீத வளர்ச்சி பெற்றுள்ள நிலையில், நிதி சேவைகள் வணிகம் 6 சதவீதமும், ஹெல்த் கேர் வருவாய் 8.8 சதவீதமும், கம்யுனிகேஷன், மீடியா மற்றும் தொழில்நுட்பம் துறை சார்ந்த வணிகம் 14.9 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
Attrition-hit Cognizant adds 9,800 employees for Q1, CY22
Attrition-hit Cognizant adds 9,800 employees for Q1, CY22 | தொடர்ந்து வெளியேறும் ஊழியர்கள்.. இருந்தாலும் 10.9% வருவாய் வளர்ச்சியில் காக்னிசென்ட்!