நரேந்திர மோடியின் ஜேர்மனி பயணத்தில் சிறுவன் பாடிய பாடல்! கோபமடைந்த அவன் தந்தை… வைரல் வீடியோ பின்னணி


இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ஜேர்மனி பயணத்தில் சிறுவன் பாடிய பாடல் வைரலான நிலையில் அதன் காரணமாக ஏற்பட்ட சர்ச்சைக்கு சிறுவனின் தந்தை எதிர்வினை ஆற்றியுள்ளார்.

அரசுமுறை பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜேர்மனி சென்றார்.
அப்போது அவரை அங்கிருந்த இந்தியர்கள் வரவேற்ற போது அக்கூட்டத்தில் இருந்த கணேஷ் என்பவரது 7 வயது மகன் மோடியிடம் ஒரு பாடலை பாடிக்காட்டினார்.

சிறுவன் பாடிய பாடலை பிரபல காமெடியன் கனால் கம்ரா எடிட் செய்து இந்திய பணவீக்கத்தை கிண்டல் செய்யும் வகையில் ஒரு பாடலை சிறுவன் பாடுவது போல டுவிட்டரில் பதிவிட்டார்.


இது பெரியளவில் வைரலானது.
இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சிறுவனின் தந்தை கணேஷும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இது குறித்த அவரின் டுவிட்டர் பதிவில், இது என் 7 வயது மகன், தனது தாய்நாட்டுக்காக உண்மையாக பாடிய பாடல். அவன் மிகவும் இளையவன் என்றாலும் தனது தாய்நாட்டை நீங்கள் குனால் கம்ராவோ கச்ராவோ யாராக இருந்தாலும் அவன் உங்களை விட நிச்சயம் அதிகமாக நேசிக்கிறான்.

உங்களுடைய இழிவான அரசியலில் இருந்து பாவம் அந்த சிறுவனை விலக்கி வைத்து விட்டு உங்களுடைய மலிவான நகைச்சுவையில் கவனம் செலுத்துங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த கனால், இது உங்களுடைய மகனுடைய நகைச்சுவை அல்ல. உங்கள் மகனுடைய நாட்டுப் பற்றுப் பாடலை நீங்கள் ரசிக்கும் வேளையில், தமது நாட்டில் உள்ள மக்கள் அவருக்காக பாடும் பாடலை இந்திய பிரதமர் கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

குனால் கம்ராவின் இந்தக் கருத்துக்கும் டுவிட்டரில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தனது வீடியோ பதிவை அவர் டெலிட் செய்துவிட்டார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.