இன்ஜினியரிங் படிப்புகளுக்கான வேலைவாய்ப்புகள் இந்தாண்டு மிக அதிக அளவில் உயரப்போவதாக கூறுகிறார் கல்வியாளர் ரமேஷ் பிரபா. அதற்கான காரணங்களை அவரிடமே கேட்டறிந்தோம்.
“ கோவிட் பெருந்தொற்றால் கடந்த ஓராண்டு காலத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் அதிக அளவிலான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தியிருக்கவில்லை. இதனால் குறைந்தபட்ச அனுபவம் உள்ளோர் அதிக எண்ணிக்கையில் வேறு வேறு நிறுவனங்களுக்கு தாவ தொடங்கினர். இங்கே ரூ.10 லட்சம் சம்பளம் என்றால் ரூ.15 லட்சம் சம்பளம் உள்ள நிறுவனத்திற்கு மாறி பின்பு அங்கிருந்து வேறு ஒன்றிற்கு மாறுவதை பலரும் வழக்கமாக கொண்டிருந்தார்கள். இதனால் மிக குறைந்த அனுபவம் உள்ள இவர்களுக்கே அதிக சம்பளம் கொடுக்க வேண்டிய நிலை பல நிறுவனங்களுக்கும் ஏற்பட்டது.
எனவே, இந்த வருடம் அதிக அளவிலான Fresher-க்களை எடுக்க பல்வேறு நிறுவனங்களும் முடிவெடுத்துள்ளன. மாணவர்களிடம் என்ன திறன் இருந்தாலும் பரவாயில்லை அவர்களை முதலில் உள்ளே எடுத்து பின்னர் தயார் செய்யலாம் என்ற ரீதியில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பெரும் நிறுவங்களின் மூலமாக மட்டும் இந்த ஆண்டில் சுமார் 3,60,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக உள்ளன. இந்த ட்ரெண்ட்டானது ஐ.டி துறைக்கு மட்டுமல்லாமல் Automobile, Banking & Finance, Pharmaceuticals, Internet services மற்றும் Manufacturing ஆகியவற்றிலும் நல்ல வாய்ப்புகள் ஏற்பட உள்ளன. இதனால் சென்ற ஆண்டை விட 4% அதிக வேலைவாய்ப்புகள் தற்போது அதிகரித்திருக்கின்றன. இதுமட்டுமல்லால் Tier-2 cities என்று சொல்லப்படக்கூடிய சென்னையைத் தாண்டிய நகரங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த வேலை வாய்ப்புகள் அதிகரிக்க உள்ளன ” என்று கூறினார் அவர்.
இருந்தாலும் பொறியியல் படிப்புகள் பற்றிய அவதூறுகள் சமூக வலைதளங்களும், திரைப்படங்களிலும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே தான் வருகின்றன. அதற்கான காரணங்கள் என்ன என்பதில் தொடங்கி பொறியியல் படிப்புகள் குறித்த பல்வேறு தகவல்களை இந்த வார ஆனந்த விகடனின் ‘நாளை என்ன வேலை’ தொடரில் எழுதியுள்ளார் ரமேஷ் பிரபா.
இத்தொடரை காணொளி வடிவில் காண்பதற்கான லிங்க் கீழே: