நிலக்கரி ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில்கள் விரைவாக இலக்கை அடைவதற்காக பயணிகள் ரயில்களின் 1,100 நடைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, மின்வெட்டு பிரச்னை நிலவி வருகிறது. இதனால் நிலக்கரியை ஏற்றிச் செல்லும் ரயில்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு விரைவில் சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற ரயில் சேவைகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்த 20 நாட்களுக்கு படிப்படியாக பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன. பயணிகள் ரயில்களின் 1,100 நடைகள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அனல்மின் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் நிலக்கரி விரைவாக அங்கு செல்லும் வகையில் 670 ரயில் சேவைகள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில்கள் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு செல்வோருக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM