இந்தியாவில் இது கோடைக்காலம் என்பதால் மின் விசிறி, ஏசி இல்லாமல் மக்களால் இருக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. ஆனால் இவை இயங்க தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய, இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளிடம் தேவையான நிலக்கரி இருப்பும் இல்லை.
எனவே விலை அதிகம் என்றாலும் எரிவாயு மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சிக்கலில் இந்தியா.. நிலக்கரி விலை உயர்வால் பல துறைகள் தவிப்பு.. விலை இன்னும் அதிகரிக்கலாம்?
மின்சார உற்பத்தி
இந்தியாவின் மின்சாரத் தேவையில் 71 சதவீதம் நிலக்கரி மூலம் கிடைக்கும் மின்சாரமே பூர்த்தி செய்து வருகிறது. மீதம் உள்ள 31 சதவீத மின்சாரத் தேவை எரிவாயு, சூரிய மின் சக்தி மற்றும் காற்றாலை மூலம் கிடைக்கிறது.
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
இது கோடைக்காலம் என்பதால் மின்சாரத் தேவை அதிகரித்து தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மின்சார பற்றக்குறை ஏற்பட்டுள்ளது. அதற்குத் தேவையான நிலக்கரியை முன்னரே திட்டமிட்டு இறக்குமதி செய்யாதது தான் காரணம் என ஆளும் அரசுகளை எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
எரிவாயு மூலம் மின்சாரம்
இந்நிலையில் தற்போது ஏற்பட்டு வரும் மின்சார பற்றாக்குறையைச் சமாளிக்க இந்திய அரசு எரிவாயு மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆலைகளில் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் எரிவாயு மூலம் 4 சதவீத மின்சார தேவை மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இப்போது அதன் உற்பத்தி அதிகரிக்கப்பட்டாலும் எவ்வளவு அதிகரிக்க முடியும் எனத் தெரியவில்லை.
எரிவாயு விலை
உக்ரைன் – ரஷ்யா போர் நடைபெற்று வருவதால் எரிவாயு விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இந்த சமயத்தில் எரிவாயு மூலம் மின்சாரம் தயாரித்தால் அதிக செலவாகும் எனவும் கூறப்படுகிறது. இருந்தாலும் கெயில் நிறுவனம் உதவியுடன் எரிவாயு கார்கோவை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மே மாதம் இறுதியில் முதல் கார்கோ இறக்குமதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான்
பாகிஸ்தானிலும் இப்போது வெயில் காலம் என்பதால் அங்கு ரம்ஜான் வாரம் மின்சார தட்டுப்பாட்டைக் குறைக்க எரிவாயு மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுச் சமாளித்தது. இப்போது மேலும் ஜூன் மாதம் 2 கார்கோ எரிவாயு வாங்க டெண்டர் கோரியுள்ளது.
இப்போது பாகிஸ்தானைப் பின்பற்றி இந்தியாவும் மின்சார தட்டுப்பாட்டைக் குறைக்க விலை அதிகம் என்றாலும் எரிவாயுவைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
India turns to expensive foreign gas to ease its power crisis
Power Crisis and Coal Shortage in India: மின்சார பற்றாக்குறையைச் சமாளிக்க இந்திய அரசு எரிவாயு மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆலைகளில் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இந்தியாவில் எரிவாயு மூலம் 4 சதவீத மின்சார தேவை மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. பாகிஸ்தானிலும் இப்போது வெயில் காலம் என்பதால் அங்கு ரம்ஜான் வாரம் மின்சார தட்டுப்பாட்டைக் குறைக்க எரிவாயு மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுச் சமாளித்தது.