இந்தியாவில், 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் 47.4 லட்சம் கோவிட் தொடர்பாக நடந்த இறப்புகள் பற்றிய உலக சுகாதார நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி, ஒட்டுமொத்த இறப்புத் தரவுகள், இறப்பு அறிக்கையின் வரலாற்றுப் போக்குகள் மற்றும் மாநிலங்களின் கோவிட் இறப்பு இழப்பீடு கோரிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்தியாவின் அதிகாரப்பூர்வ கோவிட்-19 இறப்பு எண்ணிக்கை குறைவானது என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. அநேகமாக மற்ற நாடுகளைப் போலவே, உலக சுகாதார அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்ட ‘அதிகப்படியான இறப்பு’ புள்ளிவிவரங்கள் பல கேள்விகளை எழுப்புகின்றன.
இந்தியாவில், 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் 47.4 லட்சம் கோவிட் தொடர்பாக நடந்த இறப்புகள் பற்றிய உலக சுகாதார நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி, ஒட்டுமொத்த இறப்புத் தரவுகள், இறப்பு அறிக்கையின் வரலாற்றுப் போக்குகள் மற்றும் மாநிலங்களின் கோவிட் இறப்பு இழப்பீடு கோரிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
உண்மையில், உலக சுகாதார நிறுவனத்தின் இறப்பு எண்ணிக்கை கணக்கில் கொள்ளப்பட்டால், கோவிட் 19 தொற்றுநோயின் முதல் இரண்டு ஆண்டுகளில் அனைத்து கோவிட்-19 இறப்புகளில் 90 சதவீதத்தை இந்தியா தவறவிட்டதாகக் குறிக்கும் – மேலும், அனேகமாக, லட்சக் கணக்கான இறப்புகள் பதிவு செய்யப்படவில்லை என்பதையும் குறிக்கும்.
குறிப்பிடத்தக்க வகையில், கடந்த கால தரவுகளின்படி, இந்தியா தனது மொத்த இறப்புகளில் 90 சதவீதத்திற்கும் மேல் பதிவு செய்துள்ளது. பல மக்கள்தொகை விஞ்ஞானிகள் கடந்த சில வாரங்களில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசுகையில், இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான இறப்புகள் விடுபட்டது என்பதற்கு பெரிய அளவில் சாத்தியமில்லை என்று கூறினார்கள்.
உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துப்படி, 2020 இல் 8.3 லட்சம் கோவிட்-19 இறப்புகள் நடந்தன – அந்த ஆண்டிற்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ கோவிட்-19 இறப்பு எண்ணிக்கை 1.49 லட்சமாக இருந்தது. அனைத்து நோய் பாதிப்புகளாலும் அந்த ஆண்டு நாட்டில் 81.2 லட்சம் பேர் இறந்ததாக அரசாங்கம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 83.5 லட்சம் பேர் நாட்டில் இறக்கின்றனர் என்பதைக் காட்டும் கடந்த கால தரவுகளுடன் இது ஒத்துப்போகிறது.
11 மாநிலங்களின் தரவுகளில் இருந்து, நாட்டின் இறப்பு எண்ணிக்கையில் 75 சதவீதத்தைக் கொண்டுள்ளது, இழப்பீடு கோரி விண்ணப்பித்த மொத்த எண்ணிக்கை இந்த மாநிலங்களில் உள்ள இறப்பு எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு குறைவாக உள்ளது என்பதைக் காட்டுகிறது.
2019 ஆம் ஆண்டில், இந்த இறப்புகளில் 92 சதவீத மரணங்களை இந்தியா பதிவு செய்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில், இறப்பு பதிவுகளின் அளவு 2017 இல் 79 சதவீதத்தில் இருந்து, 2018 இல் 86 சதவீதமாகவும் 2019 இல் 92 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020 இல் பதிவு செய்யப்பட்ட அனைத்து இறப்புகள் 99.95 சதவீதம் என்று கூறியுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் கூறுவது போல், 81.2 லட்சம் இறப்புகளில் 8.3 லட்சம் பேர் கோவிட்-19 தொற்றால் இறந்திருந்தால், 2020 ஆம் ஆண்டில் கோவிட் தொற்றால் ஏற்பட்ட இறப்புகள் 73 லட்சம் மட்டுமே. 2007 ஆம் ஆண்டு முதல் தரவுகள் கிடைப்பதால், அதில், இந்தியாவின் மொத்த இறப்பு எண்ணிக்கை ஒரு வருடத்தில் 80 லட்சத்திற்கும் குறைவாக இருந்ததில்லை.
2021 ஆம் ஆண்டில் 39.1 லட்சம் கோவிட்-19 இறப்புகள் நடந்ததாக உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இது ஒட்டுமொத்த உலக நாடுகளு அந்த ஆண்டு பதிவு செய்த இறப்புகளைவிட குறைந்த பட்சம் 4 லட்சம் இறப்புகள் அதிகம்.
இந்த மாதிரி பதிவு கணக்கெடுப்பு (SRS) தரவு வெளிவந்தவுடன், உண்மையான இறப்பு எண்ணிக்கை ஊகமாகவோ அல்லது ஒரு மாதிரியாக்கப் பயிற்சியாகவோ இருக்காது என்று மக்கள்தொகை விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
2021 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ கோவிட்-19 இறப்பு எண்ணிக்கை 3.32 லட்சம் ஆகும். அந்த ஆண்டில் கோவிட்-19 இறப்புகளில் கிட்டத்தட்ட 92 சதவீதத்தை இந்தியா பதிவு செய்யாமல் தவறவிட்டதாக கூறுகிறது. ஒவ்வொரு கோவிட்-19 இறப்புக்கும் அரசாங்கம் கட்டாய பண இழப்பீடு வழங்கும் நேரத்தில், இறப்புகளைப் பதிவு செய்ய மக்களுக்கு கூடுதல் ஊக்கம் ஏற்படும்.
உண்மையில், கோவிட் 19 இறப்புக்கான இழப்பீடு கோரிக்கைகள், நாட்டில் கோவிட்-19 இறப்புகளின் உண்மையான எண்ணிக்கை பற்றிய விவாதத்தில் புதிய வெளிச்சத்தை பாய்ச்சுகிறது.
11 மாநிலங்களின் கோவிட் இறப்பு தரவு, நாட்டின் மொத்த இறப்பு எண்ணிக்கையில் 75 சதவீதத்தை கொண்டுள்ளது. கோவிட் பாதிப்பால் இறந்தவர்களுக்கு இழப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களின் மொத்த எண்ணிக்கை இந்த மாநிலங்களில் உள்ள மொத்த இறப்பு எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு குறைவாக உள்ளது என்பதையும் காட்டுகிறது. குஜராத்தில், விண்ணப்பங்களின் எண்ணிக்கை இறப்பு எண்ணிக்கையை விட 10 மடங்கு அதிகமாக உள்ளது. ஆனால், கேரளாவில் பதிவு செய்யப்பட்ட கோவிட் 19 பாதிப்பால் ஏற்பட்ட இறப்புகளை விட இழப்பீடு கோரிய விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
பீகாரில் கூட, மொத்த இறப்புகளை விட விண்ணப்பங்கள் குறைவாக இருப்பதால், இறப்புகளின் உண்மையான எண்ணிக்கையை மதிப்பிடுவதற்கு இழப்பீடு விண்ண்ப்பங்கள் ஒரு முட்டாள்தனமான வழியாக இருக்காது என்பதைக் காட்டுகிறது. வசதியானவரக்ள் ரூ.50,000 இழப்பீடு பெற விண்ணப்பம் செய்யாமல் இருக்கலாம் என்ற உண்மையைத் தவிர, அரசு நிறுவனங்கள் மற்றும் சேவைகளின் அணுகல் தொடர்பான சிக்கல்களும் இந்த விண்ணப்பங்களை மக்கள் விண்ணப்பிப்பதற்கு தடையாக இருக்கலாம். இருப்பினும், அதே நேரத்தில், மக்கள் போலி விண்ணப்பங்களை செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது.
போலியாக கோவிட் இறப்புகளுக்கு இழப்பீடு கோரி விண்ணப்பம் செய்வதற்கு எதிராக உச்சநீதிமன்றம் ஏற்கனவே மக்களை எச்சரித்துள்ளது. மேலும், மகாராஷ்டிரா போன்ற ஒரு மாநிலம் போலியானவை என்று கண்டறியப்பட்ட 60,000 விண்ணப்பங்களை நிராகரித்துள்ளது.
இருப்பினும், இழப்பீடு கோரி செய்யப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ள கோவிட் 19 பாதிப்பு இறப்புகளின் எண்ணிக்கைக்கு பக்கத்தில்கூட இல்லை என்பதே இதன் முக்கிய அம்சமாக உள்ளது.
இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட கோவிட் 19 பாதிப்பு இறப்பு எண்ணிக்கையின்படி இந்தியாவில் ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு கோவிட்-19 இறப்புகள் 384 க்கு பதிலாக 3,448 என்று உலக சுகாதாரா குறிக்கும். ஒரு மில்லியனுக்கு உலக சராசரி இறப்புகள் சுமார் 804 ஆகும். இந்தியாவில், கோவாவைத் தவிர, இப்போது ஒரு மில்லியன் மக்கள்தொகையில் கேரளாவில் அதிக இறப்புகள் உள்ளன. கேரளாவில் ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு சுமார் 1,950 பேர் இறந்துள்ளனர், இது பதிவுகளை வைத்திருப்பதில் சிறந்த மாநிலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
கேரளா கோவிட் இறப்புகளை 100 சதவீதம் கணக்கிட்டுள்ளது என்று கருதுவதாக (கேரளா பின் தேதியிட்ட இறப்புகளை பதிவு செய்யவில்லை) சில வல்லுநர்கள் வாதிடுகின்றனர். ஒரு மில்லியன் எண்ணிக்கையில் கேரளாவின் இறப்பு நாடு முழுவதற்கும் விரிவுபடுத்தப்பட்டாலும் கூட, சுமார் 26.5 லட்சம் கோவிட்டுடன் தொடர்புடைய இறப்புகள், உலக சுகாதார நிறுவனத்தின் எண்ணிக்கையில் பாதிக்கும் மேலானது.
மாதிரி பதிவு கணக்கெடுப்பு (எஸ்ஆர்எஸ்) தரவு வெளிவந்தவுடன், உண்மையான இறப்பு எண்ணிக்கை ஊகமாகவோ அல்லது மாதிரி பயிற்சியாகவோ இருக்காது என்று மக்கள்தொகை விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மாதிரி பதிவு கணக்கெடுப்பு என்பது ஒரு கணக்கெடுப்பு அடிப்படையிலான மாதிரி கணக்கிடும் நடைமுறையாகும். இது ஒவ்வொரு ஆண்டும் பிறப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கையை மதிப்பிடுகிறது. இந்த மாதிரி நடைமுரை மூலம் நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக 83.5 லட்சம் பேர் உயிரிழப்பதை நாம் அறிவோம்.
இந்த எண்ணிக்கையை சரிபார்த்த பிறகு, மாநிலங்கள் மீண்டும் தேதியிட்ட இறப்புகளை கணக்கில் சேர்க்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். கேரளா தினசரி அதைச் செய்து வருகிறது. மற்ற மாநிலங்கள் அதை அவ்வப்போது செய்கின்றன. சமீபத்தில், அஸ்ஸாம், மீண்டும் இறப்புகளைச் சேர்க்கும் முறையில், இறப்பு எண்ணிக்கையில் 1,300 இறப்புகளைச் சேர்த்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு, மகாராஷ்டிரா அதன் எண்ணிக்கையில் 4,000 இறப்புகளைச் சேர்த்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“