பிரதமரின் பயணத்துக்கு பிறேக இந்திய – இஸ்ரேல் உறவு வலுவடைந்தது – எஸ். ஜெய்சங்கர்

பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்துக்கு பிறகு தான் இந்தியா – இஸ்ரேல் இடையேயான உறவு மேலும் வலுவடைந்ததாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் 74 ஆவது சுதந்திர தின விழா டெல்லியில் கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்று ஜெய்சங்கர் பேசியதாவது:
image
இஸ்ரேலுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டது முதலாக இரு நாட்டிற்கும் இடையே நட்புறவு வலுவடைந்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு இந்திய பிரதமர் ஒருவர் இஸ்ரேலுக்கு முதல் முறையாக சென்ற நிகழ்வு மிகவும் உணர்வுப்பூர்வமானது. இஸ்ரேல் 74-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் சூழலில், இந்தியாவும் நடப்பாண்டில் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடவுள்ளது. இரு நாட்டிற்கும் இடையிலான முழு ராஜாங்க ரீதியிலான உறவு 30-வது ஆண்டை எட்டியிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.