அமெரிக்காவில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி காரணமாக உயிருக்கு ஆபத்தான இரத்த உறைவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்பதால் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியால் உயிருக்கு ஆபத்தான இரத்த உறைவு வாய்ப்பிருப்பதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு அவசரம் கருதி தொடர்புடைய தடுப்பூசி அளிப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், எஞ்சிய நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசியை மறுக்கும் மக்களுக்கு ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் ஒற்றை டோஸ் தடுப்பூசியை அனுமதிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியால் மிக ஆபத்தான TTS எனப்படும் இரத்த உறைவு பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக கண்டறிந்துள்ளனர்.
இருப்பினும் தற்போதைய பெருந்தொற்று நிலையில் ஜான்சன் நிறுவனத்தின் பங்களிப்பு முக்கியம் என்பதை தாங்கள் உணர்ந்துள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆனால் மக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதும் முறையே என குறிப்பிட்டுள்ளனர்.
வியாழக்கிழமை வரையில், அமெரிக்காவில் ஜான்சன் நிறுவனத்தின் 18.7 மில்லியன் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்களில் 7.7% பேர்கள் மட்டுமே ஜான்சன் தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பில் தாங்கள் கருத்தில் கொண்டுள்ளதாகவும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் ஜான்சன் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.