தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வருகின்ற ஜூன் 23ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கிய நிலையில், வருகின்ற இருபத்தி எட்டாம் தேதி தேர்வு முடிவடைகிறது. இதில் 3 ஆயிரத்து 119 தேர்வு மையங்களில் பிளஸ் 2 பொது தேர்வு நடைபெறுகிறது.
இந்தத் தேர்வை 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இதில் 4 லட்சத்து 38 ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஆறு மாணவிகளும், 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 மாணவர்களும் இத்தேர்வை எழுதுகின்றனர்.
மேலும் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வருகின்ற ஜூன் 23ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.