சென்னை: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர்கள், மாநில பொதுச் செயலாளர்கள், மாநில செயலாளர்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட 44 பேர் அடங்கிய பட்டியலை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். அந்தப் பட்டியலில், திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் எம்பிக்கள் வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம் ஆகியோருக்கு மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், அதிமுக முன்னாள் எம்பி, சசிகலா புஷ்பாவுக்கும் மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பாஜகவைச் சேர்ந்த கரு.நாகராஜன், நாராயணன் திருப்பதி ஆகியோரும், வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ் ஆகியோருக்கும் மாநில துணை தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 11 பேருக்கு மாநில துணை தலைவர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜக சார்பில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில், நயினார் நாகேந்திரன் சட்டமன்ற குழுத் தலைவராகவும், எம்.சக்கரவர்த்தி,வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், கே.எஸ்.நரேந்திரன், கரு.நாகராஜன், சசிகலா புஷ்பா, பி.கனகசபாபதி, நாராயணன் திருப்பதி, டால்பின் ஸ்ரீதர், ஏ.ஜி.சம்பத், ஆர்.சி.பால் கனகராஜ் உள்ளிட்ட 11 பேர் மாநில துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதே போல், எம்.முருகானந்தம், இராம ஸ்ரீநிவாசன், பொன் வி.பாலகணபதி, ஏ.பி.முருகானந்தம், பி.கார்த்தியாயினி உள்ளிட்ட 5 பேர் மாநில பொது செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கராத்தே தியாகராஜன், கே.வெங்கடேசன், சுமதி வெங்கடேசன், டி.மலர்கொடி, எஸ்.மீனாட்சி, வினோஜ் பி.செல்வம், எஸ்.சரவணகுமார், எம்.மீனாதேவ், ஏ.அஸ்வத்தாமன், ஆர்.அனந்த பிரியா, ப்ரமிளா சம்பத், எஸ்.சதிஷ்குமார், எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்ட 13 பேர் மாநில செயலாளர்களாகவும், எஸ்.ஆர்.சேகர் மாநில பொருளாளராகவும், எம்.சிவசுப்பிரமணியன் இணை பொருளாளராகவும், எம்.சந்திரன் மாநில அலுவலக செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் மாநில அளவில், மகளிர் அணி தலைவராக ஆர்.உமாரதியும், இளைஞர் அணி தலைவராக எம்.ரமேஷ் சிவாவும், விவசாய அணி தலைவராக ஜி.கே.நாகராஜ் , எஸ்சி பிரிவு தலைவராக தடா பெரியசாமியும், எஸ்டி பிரிவு தலைவராக எஸ்.சிவபிரகாசமும், சிறுபான்மையினர் அணித் தலைவராக டெய்சி சரணும், ஓபிசி அணி தலைவராக எஸ்.சாய் சுரேசும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாநில செய்தி தொடர்பாளர்களாக முன்னாள் எம்பிக்களான சி.நரசிம்மன், எஸ்.கே.கார்வேந்தன் ஆகியோரும், எஸ்.ஆதவன் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.