புரோட்டா பார்சலில் பாம்புத் தோல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

திருவனந்தபுரம்: புரோட்டா, பிரியாணி சாப்பிட்டு சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது, கேரளாவில், புரோட்டா பார்சலில் பாம்பு தோல் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை படம் எடுத்து வெளியிட்டதால் வேகமாக பரவி வருகிறது.

கேரளாவில், காசர்கோடு மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து அந்த ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஷவர்மா தயாரிக்கும் அனைத்து ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூரின் ஒரத்த நாட்டில் ஷவர்மா சாப்பிட்ட மருத்துவ மாணவர்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுக்கோட்டையில் பிரியாணி சாப்பிட்ட சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

latest tamil news

இதனிடையே கேரளாவின் நெடுமங்காட்டை அடுத்த பூவத்தூர் பகுதியை சேர்ந்த பிரியா, அதே பகுதியில் உள்ள ஓட்டலில் புரோட்டா பார்சல் வாங்கி வீட்டிற்கு சென்றார். வீட்டில் சென்று பார்சலை பிரித்து பார்த்த போது, அதில் பாம்பு தோல் இருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து நெடுமங்காடு போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். பிரியா வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் உணவை வாங்கி சோதனை செய்தனர். மேலும், சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கும் சீல் வைத்தனர். புரோட்டா பார்சலில் பாம்புதோல் இருந்த படத்தை சிலர் படம் பிடித்து வெளியிட அது வைரலாக பரவி வருகிறது. பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.