நாட்டில் பல்வேறு குழுக்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள்.
ஜனநாயக முறையில் போராடுவதற்கு அவர்களுக்கு உரிமையுண்டு. எனினும் குழப்பம் விளைக்கும் வகையில் செயறப்படுதல், பொது மக்கள் அல்லது பொது பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
அதன்படி, அமைதியான முறையில் ஆர்ப்பாட்ட பேரணிகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.